கல் உப்பு + புளி போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி தொந்தரவு இருக்காது!!

0
38
#image_title

கல் உப்பு + புளி போதும்.. இனி ஆயுசுக்கும் மூட்டு வலி தொந்தரவு இருக்காது!!

இன்றைய காலத்தில் பெரும்பாலானோர் மூட்டு வலியால் அவதிப்பட்டு வருகின்றனர்.இதற்கு மூட்டு எலும்பை சுற்றி இருக்கும் பகுதியில் உள்ள ஜவ்வு தேய்மானம் ஆகுவதே முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.இதை ஆரம்ப நிலையில் கண்டறிந்து குணப்படுத்துவது மிகவும் முக்கியம் ஆகும்.இதற்கு இயற்கை முறையில் தீர்வு காண்பதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்:-

*கல் உப்பு – 3 தேக்கரண்டி

*புளி – பெரிய சைஸ் எலுமிச்சை பழ அளவு

*மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

*சின்ன வெங்காயம் – 4

*நல்லெணெய் – 1 தேக்கரண்டி

செய்முறை:-

சிறு உரலில் தோல் உரித்த சின்ன வெங்காயம் சேர்க்கவும்.அதை நன்கு தட்டி கொள்ளவும்.பின்னர் அதில் கல் உப்பு சேர்த்து இடிக்கவும்.கொரகொரப்பாக இடித்தால் போதும்.

பின்னர் உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடிய நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி அதில் சேர்க்கவும்.அதோடு குழம்புக்கு பயன்படுத்தும் மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி சேர்த்து இடிக்கவும்.இறுதியாக எடுத்து வைத்துள்ள புளியை அந்த கலவையில் நன்கு கலக்கி எடுத்து மூட்டுகளில் வலி இருக்கும் இடத்தில் வைத்து அழுத்தம் கொடுக்கவும்.இப்படி தொடர்ந்து செய்து வருவதன் மூலம் மூட்டுவலி பாதிப்பை சரி செய்து விட முடியும்.

மற்றொரு முறை:-

தேவையான பொருட்கள்:-

*சோம்பு – 1 தேக்கரண்டி

*கருப்பு மிளகு – 5 முதல் 6

*புதினா இலை – 4

செய்முறை:-

அடுப்பில் டீ போடும் பாத்திரத்தில் 1 கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்தவும்.பின்னர் அதில் சோம்பு (பெருஞ்சீரகம்) 1 தேக்கரண்டி,கருப்பு மிளகு 6 மற்றும் வாசனை நிறைந்த புதினா இலைகள் 4 சேர்த்து மிதமான கொதிக்க விடவும்.

1 கிளாஸ் தண்ணீர் சுண்டி 1/2 கிளாஸாக வரும் வரை காத்திருந்து அடுப்பை அணைக்கவும்.பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி கொள்ளவும்.சுவைக்காக தேன்,நாட்டு சர்க்கரை உள்ளிட்ட எதையும் சேர்க்க தேவையில்லை.இந்த பானத்தை அப்டியே பருகாலம்.தினமும் 2 வேளை குடிப்பது நல்லது.இதை தொடர்ந்து பருகி வந்தோம் என்றால் மூட்டுகளில் நீர் கோர்த்தல் பாதிப்பு நீங்கி முட்டுவலி பிரச்சனை சரியாகும்.