பொல்லாத கண் திருஷ்டியை தவிடுபொடியாக்கும் கல் உப்பு!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

Photo of author

By Divya

பொல்லாத கண் திருஷ்டியை தவிடுபொடியாக்கும் கல் உப்பு!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

கண் திருஷ்டி பல தீய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை.கண் திருஷ்டிக்கு அஞ்சாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.ஒருவருக்கு பொறாமை ஏற்படும் பொழுது அவை கண் திருஷ்டியாக மாறுகிறது.

இதனால் நன்றாக வாழந்த ஒருவருக்கு வீழ்ச்சி,தோல்வி ஆகியவை ஏற்படும்.ஒருவரின் வளர்ச்சி மீது பொறாமை ஏற்படுவதால் கெட்ட எண்ணங்கள் கொண்ட நபர்களால் கண் திருஷ்டி ஏற்படுகிறது.

இதனால் தான் வீட்டில் எந்த இரு விசேஷம் நடந்தாலும் அவை முடிந்த பிறகு திருஷ்டி சுத்தப்படுகிறது.ஒரு சிலர் கடுகு,மிளகாய்,உப்பு கொண்டு திருஷ்டி கழிப்பார்கள்.ஒருசிலர் எலுமிச்சம் பழத்தை கொண்டு திருஷ்டி சுத்தி போடுவார்கள்.

பச்சை மிளகாய் மற்றும் எலுமிச்சையை கோர்த்து வீட்டு வாசலில் கட்டி தொங்கவிட்டால் கண் திருஷ்டி ஒழியும் என்பது பலரின் நம்பிக்கை.

ஆனால் வெறும் கல் உப்பை மட்டும் கொண்டு உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் மொத்த கண் திருஷ்டியையும் ஒழிக்க முடியும்.கல் உப்பு தீய திருஷ்டியில் இருந்து தங்களை காக்க உதவுகிறது.

கல் உப்பு ஒரு கைப்பிடி அளவு எடுத்து தங்களை தாங்களே இடமிருந்து வலமாக மூன்று முறை சுற்றி நீரில் கரைத்து கால் படாத இடத்தில் ஊற்றி விட வேண்டும்.இவ்வாறு செய்தால் கண் திருஷ்டி முழுமையாக ஒழியும்.