“போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அதற்கும் எங்களிடம்…” ரோஹித் ஷர்மா நம்பிக்கை!

0
144

“போட்டி மழையால் பாதிக்கப்பட்டால், அதற்கும் எங்களிடம்…” ரோஹித் ஷர்மா நம்பிக்கை!

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா இன்று நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டி பற்றி பேசியுள்ளார்.

இந்திய அணி 2022 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை தொடரில் இன்று பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. மெல்போர்னில் நடக்கும் இந்த போட்டியில் மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் வெளியாகியுள்ளன. மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் ஒன்றான இந்த போட்டியைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிக்கெட் எடுத்துள்ளனர்.

மெல்போர்ன் நகரில் நேற்று முன் தினம் வரை மழை பெய்துள்ளது. இதனால் போட்டி நடப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன.இந்த போட்டி மழையால் பாதிக்கப்பட்டால் ஒளிபரப்பாளர்களுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்தும். இந்த போட்டிக்கான விளம்பரக் கட்டணங்கள் மற்ற போட்டிகளை விட கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டு இருக்கும்.

இந்நிலையில் நேற்று பேசியுள்ள இந்திய அணியின் கேபட்ன் ரோஹித் ஷர்மா “போட்டி மழையால் பாதிக்கப்பட்டு ஓவர்கள் குறைக்கப்பட்டால் அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம். சமீபத்தில் நாங்கள் இதுபோல ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 8 ஓவர் போட்டியில் விளையாடியுள்ளோம். அதனால் வீரர்கள் அதற்கும் தயாரான மனநிலையிலேயே இருக்கின்றனர்” எனக் கூறியுள்ளார்.

இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. கடந்த முறை உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதனால் இந்தமுறை வெற்றிபெற இந்திய அணி கடுமையாக உழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleஉப்பு மட்டும் இருந்தால் போதும்!கஷ்டங்களில் இருந்து விடுபட இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்!  
Next articleஎல்லா இந்திய பேட்ஸ்மேன்களுக்கும் வியூகம் இருக்கு – பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம்