முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!!

0
336
#image_title

முறைகேட்டில் ஈடுபட்ட சேலம் திமுக ஊராட்சி மன்ற தலைவர் பதவி நீக்கம்..!!

சேலம்: ஆத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பைத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராக செயல்பட்டு வருபவர் திமுகவை சேர்ந்த கலைச்செல்வி சிவக்குமார்.

இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ஆட்டுக்கொட்டகை அமைப்பது, பணமோசடி, அரசு நலத் திட்டங்களை மக்களுக்கு பெற்று தராது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. திமுக ஊராட்சி மன்ற தலைவரின் முறைகேடு நாளுக்கு நாள் அதிகரிக்கவே அப்பகுதி மக்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இதுகுறித்து புகார் தெரிவித்தனர்.

பொதுமக்களின் புகாரை பெற்றுக் கொண்டு ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வி சிவக்குமாரிடம் உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் ஊராட்சி மன்ற தலைவர் முறைகேட்டில் ஈடுபட்டது உண்மை என்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அவர்கள் ஊராட்சி மன்றத் தலைவர் கலைச்செல்வி சிவக்குமாரை பதவி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட திமுக ஊராட்சி மன்றத் தலைவரை மாவட்ட ஆட்சியர் பதவி நீக்கம் செய்திருப்பது அப்பகுதி மக்களிடையே வரவேற்ப்பை பெற்று வருகிறது. “பலநாள் திருடன் ஒருநாள் அகப்படுவான்” என்பது போல் திமுகவை சேர்ந்தவர்கள் செய்த ஊழல், முறைகேடு, பணமோசடி உள்ளிட்ட குற்றச் செயல்கள் தற்பொழுது ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்து மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Previous article1960 வந்த வெள்ளம் நடிகர் திலகம் சிவாஜி செய்த செயல்!
Next articleபோட்டி போடும் நடிகர்கள்! கல்யாணத்திற்கு சம்மதித்த 45 வயது நடிகை!