மணல் கடத்தல் கும்பலால் அதிகாரிகள் காயம்! பீஹாரில் பரபரப்பான சம்பவம்!
பீஹாரில், மணல் கடத்தல் குறித்து ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகளை, கற்களை வீசியும், குச்சியை கொண்டு மாபியா கும்பல் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம், பாட்னா மாவட்டத்தில் இருக்கும் பிஹ்தா நகரில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக, சுரங்கத்துறைக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.
எனவே, அப்பகுதியில் உள்ள மண் குவாரிகளை பார்வையிட, பாட்னாவின் மணல் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள், காவலர்கள் மற்றும் தாசில்தார் சென்றுள்ளனர்.
பார்வையிட சென்ற அதிகாரிகளை கண்ட மாபியா கும்பல், அவர்கள் மீது கற்களை வீசி, கட்டையால் அடித்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
அதை தடுக்க சென்றச் காவலர்களையும் தாக்கி இருகின்றனர். மாபியாக்கள், மற்றும் காவலர்கள் ஒருவரை கடுமையாக தாக்கியதில், அவர் கத்தியுள்ளார். இந்த சத்தம் கேட்டு அங்கிருந்த பகுதி மக்கள் விரைந்து வர மாபியாக்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்கள்.
காயம் அடைந்த காவலர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். பிறகு அங்கிருந்த சிசிடிவி கேமராவை பார்த்து தப்பியோடியவர்களை கைது செய்துள்ளனர்.
மேலும் மணல் கடத்திய போது, தடுக்க வந்த அதிகாரியை தாக்கி சட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் கைது செய்த 44 பேரையும் சிறையில் அடைத்துள்ளனர்.
அது மட்டுமின்றி 50 வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர், இன்னும் இதில் சம்மந்தப்பட்ட அனைவரும் கைது செய்யபடுவார்கள் எனவும் மாபியா களை விசாரணை செய்த அதிகாரிகள் கூறினர்.