சஞ்சய் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு ரத்து!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

0
107
Sanjay Mishra's extension canceled!! Supreme Court Order!!
Sanjay Mishra's extension canceled!! Supreme Court Order!!

சஞ்சய் மிஸ்ராவின் பதவி நீட்டிப்பு ரத்து!! உச்ச நீதிமன்றம் உத்தரவு!!

அமலாக்கத்துறையில் இயக்குனராக பணிபுரிந்து வந்தவர் தான் சஞ்சய் குமார் மிஸ்ரா ஆவார். இவரின் பதவி காலம் முடிந்த பிறகும் மத்திய அரசு இவருக்கு மூன்று முறை பதவி நீட்டிப்பு வழங்கி உள்ளது.

இதனை எதிர்க்கும் விதமாக இந்த பதவி நீட்டிப்பை ரத்து செய்யக்கோரி காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சிங் சுர்ஜேவாலா, மத்தியப் பிரதேச மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயா தாக்கூர், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா முதலியோர் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கை நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான மூன்று நீதிபதிகளுடன் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் இவ்வாறு ஒருவருக்கு தொடர்ந்து பதவி நீட்டிப்பு வழங்குவது அமைப்பின் செயல்பாடுகளை பாதிக்கும் விதமாக இருப்பதாக மனு தாரர்கள் பக்கம் வாதாடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து சஞ்சய் மிஸ்ராவின் பதவி காலம் வருகின்ற நவம்பர் மாதத்தோடு முடிவடையும் நிலையில், இதன் பிறகு இவரின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதையடுத்து மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது இவருக்கு மூன்றாவது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கியதை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும், இவர் ஜூலை 31 ஆம் தேதி வரை பணியில் தொடரலாம் என்றும் அறிவித்துள்ளது. ஓய்வு பெரும் வயதை அடைந்த பிறகும் இவ்வாறு பதவி வகிக்கும் நீட்டிப்பு குறிகிய காலத்திற்கு இருக்க வேண்டும் என்றும், மூன்றாவது முறையாக பதவி வழங்கியது உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பிற்கு எதிரானது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous article18 ஆண்டுகள் கடந்தும் தாக்கத்தை ஏற்படுத்திய படம்!! முன்னணி நடிகர்கள்  ரிஜெக்ட் செய்த கதை!!  
Next articleஹீரோவாக அவதாரம் எடுக்கும் புகழ்!! யோகி பாபு இடத்தை விரைவில் பிடித்துவிடுவார் என்று புகழாரம்!!