சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்! வருமான வரி துறையினர் செய்த அதிரடி செயல்!

Photo of author

By Hasini

சசிகலாவின் சொத்துக்கள் முடக்கம்! வருமான வரி துறையினர் செய்த அதிரடி செயல்!

கடந்த 2017 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மற்றும் அவருடைய தோழி சசிகலாவிற்கும் சொந்தமான 157 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்தனர். அந்த சோதனையின் போது பினாமி சொத்துகள் என சொல்லப்பட்ட சொத்துக்களை கைப்பற்ற வருமான வரித் துறை முடிவு செய்தது.

எனவே தற்போது சென்னையை அடுத்த பையனூரில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள பங்களா முடக்கப்பட்டிருக்கிறது. சொத்துக்களை முடக்கி உள்ள அதிகாரிகள் அங்கு நோட்டீஸ் ஒட்டி வைத்துள்ளனர். 2019 பினாமி சட்டத்தின் கீழ் சசிகலாவிற்கு தொடர்புடைய 1600 கோடி மதிப்புடைய சொத்துக்களும் முடக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல 2020 ஆம் ஆண்டு மட்டும் கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் உட்பட 65 சொத்துக்கள் முடக்கப்பட்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகவே தற்போது பையனூர் பங்களாவை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு முடக்கப்பட்டது.

அரசியல் தலைவர்கள் மக்களுக்கு நன்மை செய்கிறேன் என்று தான் ஆட்சியில் நுழைகிறார்கள். அதன் பிறகு மக்களுக்கு பேருக்கு நாலு நன்மைதரும் திட்டங்களை செய்து அதன் பின் அவர்கள் குடும்பத்திற்கு சொத்து சேர்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். நினைத்து பாருங்கள் முதலமைச்சரின் தோழியே 1600 கோடி மதிப்புள்ள சொத்துக்களை கைவசம் வைத்துள்ளார் என்றால், மற்ற அரசியல் தலைவர்களை யோசித்து பாருங்கள்.

ஆமாம் எல்லாரும் கர்ம வீரர் காமராஜர் போலவே உடுத்த உடை கூடவா இருப்பார்கள். அவர் இரண்டே உடையை வைத்துக் கொண்டு காலம் தள்ளினார். ஆனால் அவர் ஆட்சி அமைக்க தகுந்த சூழல் இருந்ததா சொல்லுங்கள். நாம் தான் யாரவது குருட்டாம் போக்கில் நன்மை செய்கிறேன் என்று சொன்னால் போதும் எதையும் ஆராயாமல், கட்சி விட்டு கட்சி தாவி விடுவோமே.