நடப்பு கல்வியாண்டு மாணவர்களுக்கு உதவித்தொகை!! தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்!!
ஆண்டுதோறும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பாக பள்ளி மற்றும் கல்லூரி பயில விரும்பும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகின்றது.இதற்கு தகுதி உடையவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று இந்த வருடமும் கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பாக உதவிதொகை வழங்கப்பட இருக்கின்றது.இதற்காக அறக்கட்டளை சார்பாக அறங்காவலர் அவர்களால் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
அவர் வெளியிட்டதில் நடப்பு கல்விஆண்டிற்கான கல்வி உதவித்தொகை பெருவதற்கு தகுதியுடைய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனத்தில் பயில வேண்டும்.
இவ்வாறு இருக்கும் பட்சத்தில் உள்ள மாணவர்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இதற்கு விண்ணப்பிபவர்களுக்கு என்று கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை சார்பாக சில வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி விண்ணப்பிக்கும் மாணவர்கள் இறுதியாக எழுதிய தேர்வில் கட்டாயம் 80 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். மேலும் அவரது குடும்ப வருமானம் 1 லட்சத்திற்கும் கீழ் இருக்க வேண்டும்.
இந்த தகுதி உடையவர்கள் மட்டுமே அறக்கட்டளை சார்பாக கொடுக்கப்பட்டுள்ள https://images.assettype.com/kalkionline/2023-06/0a7f2ec6-aa82-481b-baae-9cfd3118853c/Kalki_Trust_Form.pdf என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.மேலும் அதனுடன் கேட்கப்பட்ட அனைத்து ஆவணங்களையும் இணைத்து கல்கி கிருஷ்ணமூர்த்தி நினைவு அறக்கட்டளை ,கீதம் முதல் மாடி ,நெ 14 ,நான்காவது பிரதான சாலை ,கஸ்தூறப்பா நகர் அலையாறு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.