விஷ ஜந்துக்கள் இருக்கும் ஆபத்தான தண்ணீரை கடக்கும் பள்ளி மாணவர்கள்! அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்!

Photo of author

By Rupa

விஷ ஜந்துக்கள் இருக்கும் ஆபத்தான தண்ணீரை கடக்கும் பள்ளி மாணவர்கள்! அலட்சியம் காட்டும் அரசு அதிகாரிகள்!

இந்த ஆண்டு அனைவருக்கும் பொது தேர்வு நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியாகி மூன்று மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் அடுத்தடுத்த வகுப்பிற்கான பாடங்கள் தொடங்கப்பட்டு விட்டது. தற்பொழுது ஆங்காங்கே சில மாவட்டங்களில் கனத்த மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் அருகில் உள்ள குளம், குட்டை ஆகியவை நிரம்பி வழிகின்றது. அந்த வகையில் பரமக்குடியில் பார்த்திபனூர் என்ற இடத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அந்த கிராமத்தை சுற்றியுள்ள மாணவர்கள் அப்பள்ளியில் தான் படித்து வருகின்றனர்.

சில மாணவர்களால் வீடுகளில் இருந்து வர முடியாத சூழலில் பள்ளியில் இருக்கும் விடுதியில் தங்கி படிக்கின்றனர். அவ்வாறு தங்கி படிக்கும் மாணவர்களின் விடுதியானது பள்ளியில் இருந்து 200 மீட்டர் அப்பால் கட்டப்பட்டுள்ளது. இந்த விடுதி கட்டி ஏழு வருடங்கள் ஆன போதிலும் இதுவரை விடுதியில் இருந்து பள்ளிக்கு செல்ல சரியான சாலை வசதி இல்லை. மாணவர்கள் அனைவரும் அங்குள்ள கலங்கலான தேங்கி இருக்கும் குட்டையை தினந்தோறும் கடந்து செல்கின்றனர்.

தற்பொழுது மழை பெய்து வருவதால் அந்த குட்டை சேரும் சகதியுமாக பல விஷ ஜந்துக்களும் உள்ளது. இதனை கடந்து செல்லும் மாணவர்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும். இதனை சீர் செய்து தரும்படி அங்குள்ள மாணவர்கள் இது குறித்து நடவடிக்கை எடுக்கும் ஊழியர்களிடமும் பெரிய அதிகாரிகளுடனும் தெரிவித்து விட்டனர்.

ஆனால் இதுவரை அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழைக்காலங்களில் அதிக அளவு தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த சூழலில் மாணவர்கள் பாட புத்தகங்களை சுமந்து கொண்டு தண்ணீரில் கடந்து செல்ல சிரமப்படுகின்றனர். அதுமட்டுமின்றி மாணவர்கள் தங்கி இருக்கும் இடத்தை சுற்றி குட்டை போன்ற தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசு அதிகமாக காணப்படுகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது. இதனால் இதற்குரிய அதிகாரிகள் இதில் உடனே கவனம் செலுத்தி தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அம்மானவர்கள் கேட்டுள்ளனர்.