இரண்டு நாட்களுக்கு பள்ளி விடுமுறை! காரணம் இதுதான்!

Photo of author

By Parthipan K

இரண்டு நாட்களுக்கு பள்ளி விடுமுறை! காரணம் இதுதான்!

Parthipan K

Updated on:

School vacation for two days! This is the reason!

இரண்டு நாட்களுக்கு பள்ளி விடுமுறை! காரணம் இதுதான்!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக உலக அளவில் வானிலை  மாற்றம் நிகழ்ந்து வருகிறது.இந்த அடிபடையில்  இந்தியாவிலும் வழக்கத்திற்கு மாறாக வானிலை மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டில் பல்வேறு மாநிலங்களில்  கோடை வெப்பத்தின் தாக்கம் அதிக அளவு பதிவு செய்யப்பட்டது.

மேலும் இதற்கிடையில் தற்போது பெரும்பாலான மாநிலங்களில் கன மழை பெய்து வருகிறது.தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளாவில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதிகளில் மிதமான மழை பொழிகிறது. நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஓரிடங்களில் கனமழை பெய்ய கூடும்  எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சோலையார், வால்பாறை ,சின்னக்கல்லார் உள்ளிட்ட பகுதிகளில் மக்களின்  இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிப்படைந்துள்ளது. மழையின் காரணமாக வால்பாறையில் உள்ள பள்ளிகளுக்கு இரண்டு  நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.