BMW காரில் கஞ்சா விற்பனை ஜோர்!தலைமறைவாக உள்ள பெண் முன் ஜாமீன் கோரி மனு!

Photo of author

By Savitha

BMW காரில் கஞ்சா விற்பனை ஜோர்!தலைமறைவாக உள்ள பெண் முன் ஜாமீன் கோரி மனு!

மதுரையில் BMW காரில் வைத்து கஞ்சா விற்பனை செய்த வழக்கில் தலை மறைவாக இருக்கும் பெண் முன் ஜாமின் வழங்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.

அரசு தரப்பில் முன் ஜாமின் வழங்க கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் முன் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் ஐயர் பங்களா கண்ணனேந்தல் பகுதியைச் சேர்ந்த பரமேஸ்வரன் (42) இவர் தனது மனைவி விஜயலட்சுமி ஆகிய இருவரும் மதுரை மற்றும் சுற்று மாவட்டங்களில் BMW, fortuner போன்ற சொகுசு கார்களில் சென்று கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளனர்.

இதன் அடிப்படையில் போலீசார் பரமேஸ்வரன் கஞ்சா கடத்தும் போது 72 கிலோ கஞ்சாவுடன் வைத்து கைது செய்தனர். மேலும் BMW, fortuner 5 விலையுயர்ந்த சொகுசு கார்கள்,14 செல்போன்கள், ஒரு லேப்டாப், ஒரு தங்க சங்கிலி, உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து பரமேஸ்வரனை கைது செய்தனர். மேலும் அவரது மனைவி விஜயலட்சுமி  மீதும் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள பரமேஸ்வரன் மனைவி விஜயலட்சுமி தனக்கு முன் ஜாமின் வழங்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் செந்தில்குமார் கஞ்சா விற்பனை குறித்து தமிழ்நாடு அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது இந்நிலையில் கணவன் மனைவி BMW உள்ளிட்ட சொகுசு கார்களில் கஞ்சா விற்பனை செய்துள்ளனர். 72 கிலோ கஞ்சா இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மனைவியை கைது செய்து போலீஸ் விசாரிக்க வேண்டி உள்ளதால் இவர்களது மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார்.

இதனை பதிவு செய்த நீதிபதி முன் ஜாமின் வழங்க முடியாது மனு தள்ளுபடி செய்யப்படும் என தெரிவித்தார். அப்பொழுது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் தங்கள் மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திரும்ப பெறுவதற்கு அனுமதி வழங்கி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.