திருச்சியில் நடைபெறும் மாநாடு முடிந்ததும் இபிஎஸ் கட்சி கலைந்து சிதறும்! ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அதிரடி பேட்டி! 

திருச்சியில் நடைபெறும் மாநாடு முடிந்ததும் இபிஎஸ் கட்சி கலைந்து சிதறும்! ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் அதிரடி பேட்டி! 

வரும் 24ம் தேதி திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு இலட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள். திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு பிறகு இபிஎஸ் தரப்பினர் எங்களை கண்டு சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள். ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம் பேட்டி.

திருச்சிசியில் நடைபெறவிருக்கும் மாநாடு தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சார்பில் எம்எல்ஏக்கள் வைத்தியலிங்கம், மனோஷ் பாண்டியன், ஆகியோர் டிஜிபி அலுவலகத்தில் மனு அளித்ததனர்.

ஓபிஎஸ் தலைமையில் திருச்சியில் வரும் 24ம் தேதி நடைபெறும் மாநாட்டிற்கு லட்சக்கணக்கான அதிமுக தொண்டர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக காவல்துறை ஒத்துழைப்பு வழங்க கோரி டிஜிபி சைலேந்திரபாபுவை சந்தித்து மனு அளித்தோம்.

தொண்டர்கள் தான் இந்த கட்சி என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு அமையும்.எங்கள் மாநாடு அறிவித்த உடன் எடப்பாடி பழனிச்சாமி மதுரை மாநாட்டை அறிவித்துள்ளனர்.திருச்சியில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கு பிறகு இபிஎஸ் தரப்பினர் எங்களை கண்டு சிதறி சின்னாபின்னம் ஆகி விடுவார்கள்.

சசிகலாவை பேச்சுவார்த்தைக்கு அழைப்பதாக கூறியிருந்ததை பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,உரிய நேரத்தில் இதற்கான பதில் தரப்படும் என்று கூறிய அவர், கூட்டணி கட்சி சார்பாகவும் யாரையும் இந்த மாநாட்டிற்கு அழைக்கவில்லை என்றும் தங்களுடைய செல்வாக்கை நிரூபிக்கும் மாநாடாக இது இருக்கும் என்று கூறினார்.

மேலும் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு இரட்டை இலை சின்னம் வேண்டும் என்று கேட்டு இருக்கிறோம். தேர்தல் கமிஷன் முடிவை பொருத்து அது குறித்து அறிவிப்பை வெளியிடுவோம் என்றும் அவர் கூறினார்.