அரையாண்டு தேர்வு: டிசம்பர் 13 முதல் தொடக்கம்! தாமதமான தேர்வால் விடுமுறையில் கையை வைத்த தமிழக அரசு..!!

0
233
#image_title

அரையாண்டு தேர்வு: டிசம்பர் 13 முதல் தொடக்கம்! தாமதமான தேர்வால் விடுமுறையில் கையை வைத்த தமிழக அரசு..!!

தமிழகத்தில் செயல்படும் அனைத்து பள்ளிகளுக்கும் ஆண்டு இறுதியில் அரையாண்டு தேர்வு நடத்துவது வழக்கம். அதன்படி 2023 ஆம் ஆண்டில் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது. ஆனால் மிக்ஜாம் புயலால் தேர்வு தேதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதன்படி டிசம்பர் 7 அன்று நடைபெறவிருந்த தேர்வு இன்று அதாவது டிசம்பர் 11 ஆம் தேதி நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்திருந்தது.

ஆனால் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் பள்ளி மாணவர்களின் பாடப் புத்தகங்கள் மழையால் சேதமடைந்துள்ள காரணத்தினால் அவர்கள் தேர்வுக்கு தயாராவதில் சிரமம் ஏற்படும் நிலை உருவாகி இருக்கிறது. இதனால் தமிழக அரசு டிசம்பர் 13 ஆம் தேதிக்கு தேர்வை ஒத்திவைத்துள்ளது.

அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வானது வருகின்ற டிசம்பர் 13 ஆம் தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. தேர்வு தேதியில் மாற்றம் கொண்டு வந்திருப்பது போல் தேர்வு முடிந்து விடப்படும் விடுமுறையிலும் தமிழக அரசு மாற்றம் கொண்டு வந்திருக்கிறது. அதன்படி தேர்வு முடிந்து டிசம்பர் 23 ஆம் தேதி முதல் ஜனவரி 01 ஆம் தேதி வரை 10 நாட்களுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

Previous articleடிசம்பர் 20 இல் தொடங்கி 25 ஆம் தேதி வரை சம்பவம் செய்ய காத்திருக்கும் கனமழை.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்!!
Next article“மிக்ஜாம்” வெள்ள நிவாரண தொகை விவகாரம்.. தமிழக அரசுக்கு வந்துள்ள புது சிக்கல்..!!