பாஜக கட்சியில் இருந்து மூத்த தலைவர் விவேகானந்த் விலகுவதாக அறிவிப்பு! பரபரப்பாகும் தேர்தல் களம்!!

0
42
#image_title

பாஜக கட்சியில் இருந்து மூத்த தலைவர் விவேகானந்த் விலகுவதாக அறிவிப்பு! பரபரப்பாகும் தேர்தல் களம்!!

தெலங்கானா மாநில பாஜக கட்சியின் மூத்த தலைவர் விவேகானந்த் அவர்கள் பாஜக கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இவருடயை இந்த அறிவிப்பு பாஜக கட்சிக்கு பெரும் பின்னடைவை கொடுத்துள்ளது.

நவம்பர் 30ம் தேதி தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கம் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது. மேலும் டிசம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகளை அறிவிக்கவுள்ளதாக தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

இதையடுத்து தெலங்கானா மாநிலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. காங்கிரஸ், பாஜக, பாரத ராஷ்டிர சமிதி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையே தேர்தலில் வென்று ஆட்சி அமைக்கப் பொது யார் என்பது குறித்து கடும் போட்டி நிலவி வருகின்றது.

மேலும் தேர்தலில் வெற்றி யாருக்கு என்பது குறித்து நடத்தப்படும் கருத்துக் கணிப்புகளில் பெருமளவு காங்கிரஸ் கட்சிதான் வெற்றி பெறும் என்று முடிவுகள் கூறுகின்றது. இதனால் மற்ற கட்சியில் இருக்கும் முக்கிய தலைவர்கள் பலரும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக பாஜக கட்சியில் இருப்பவர்கள் பலரும் ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் தெலங்கானா மாநில பாஜக கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான விவேகானந்த் அவர்கள் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் இது தொடர்பாக ராஜினாமா கடிதம் எழுதி தெலங்கானா மாநில பாஜக கட்சி தலைவர் கமிஷன் ரெட்டி அவர்களுக்கு ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளார்.

இது தொடர்பாக ராஜினாமா கடிதத்தில் மூத்த தலைவர் விவேகானந்த் அவர்கள் “ஆழ்ந்த இதயத்துடன் நான் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகுகிறேன். உங்கள் ஆதரவுக்கும் அன்பிற்கு மிகுந்த நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் பாஜக கட்சியில் இருந்து விலகிய விவேகானந்த் அவர்கள் விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

கடந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜக கட்சியில் இணைந்த தெலங்கானா மாநில முன்னாள் எம்.எல்.ஏ கொமட்டிரெட்டி ராஜ்கோபால் ரெட்டி அவர்களும் தற்பொழுது பாஜக கட்சியில் இருந்து விலகியுள்ளதாகவும் அவர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் தெலங்கானா மாநிலத்தில் சந்திரசேகர ராவ் அவர்களின் ஆட்சியை வீழ்த்துவதே என்னுடைய நோக்கம் என்றும் தெலங்கானா மாநில மக்களின் மனநிலையானது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக மாறியுள்ளது என்றும் அவர் கூறியிருந்தார்.