கருக்கலைப்பு செய்ய தனி வாரியம் அமைப்பு!! தமிழக அரசு அரசாணை வெளியீடு!!
இப்போது இருக்கக்கூடிய பெண்களுக்கு குழந்தை பிறப்பது என்பது கனவாக இருந்து வருகிறது. அதாவது ஏராளமான பெண்களுக்கு இப்போது கர்ப்பப்பையில் கட்டி போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுவதால் குழந்தை பிறப்பது மிகவும் சிரமமாக இருக்கிறது.
இவ்வாறு குழந்தைக்காக ஏங்கும் பெண்களின் மத்தியில், குழந்தை வரம் கிடைத்தாலும் அதை கருக்கலைப்பு என்னும் பெயரில் சில பெண்கள் அழித்து விடுகின்றனர். குழந்தையின் உயிரை கருவிலேயே இவ்வாறு கலைப்பது கொலைக்கு சமமாகும்.
இவ்வாறு செய்வதால் தாயின் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம். இந்த கருகலைப்பு செய்யப்படும் ஆய்வகங்களை அரசு தீவிரமாக கண்காணித்து வருகிறது.
சட்ட விரோதமாக செயல்படக்கூடிய ஆய்வகங்களுக்கு சீல் வைக்கப்பட்டு வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் இந்த சட்ட விரோத கருக்கலைப்பு முறை தற்போது குறைந்துள்ளது.
மேலும், கருக்கலைப்பிற்கு மாத்திரை விற்றால் கூட தண்டனை வழங்கப்படும் என்று நான்கு நாட்களுக்கு முன்பு குடும்ப நலத்துறை துணை இயக்குனர் கூறி இருந்தார்.
அந்த வகையில், தற்போது பெண்கள் கருக்கலைப்பு செய்ய விரும்பினால் அதை முடிவு செய்வதற்காக இனி அனைத்து அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் இதற்காக ஒரு தனி வாரியம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை செயலர் சுகன்தீப் சிங் கூறியதாவது, கருக்கலைப்பு மேற்கொள்ள அனைத்து மாநிலங்களும் தனி வாரியம் அமைக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
அதன் மூலமாக கருக்கலைப்பு செய்ய விரும்பும் பெண்களிடம் முழு விவரங்களையும் கேட்டறிந்து, இவ்வாறு செய்வதால் கர்பிணிப்பெண்ணுக்கு ஏதேனும் ஆபத்து நேருமா என்பதையெல்லாம் ஆய்வு செய்து மட்டுமே இதற்காக உரிய முடிவை வழங்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கு போதிய காரணங்கள் இல்லையென்றால் கருகலைப்பு செய்வதை தடை விதிக்கவும் இந்த தனி வாரியத்திற்கு உரிமை வழங்கப்பட்டு உள்ளது. இந்த வாரியத்தில், மகப்பேறு பெண்கள் நலன், பச்சிளம் குழுந்தைகள் நலன், குழந்தைகள் நரம்பியல் நலன் முதலிய துறைகளின் தலைவர்கள் இதில் இடம் பெறுவார்கள்.