தாயுடன் உல்லாசம்! மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோவில் காவலாளி!

Photo of author

By Kowsalya

தாயுடன் உல்லாசம்! மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த கோவில் காவலாளி!

தாயுடன் கள்ள உறவு, தாய் இல்லாததால் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த காமுகன்.

சென்னை பெருங்குடி கல்லுக்குட்டை அப்பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார்.

தாய் மற்றும் தந்தை வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பிரபாகரன். 40 வயதை கடந்த இவர் புளியந்தோப்பில் பகுதியை சேர்ந்தவர். அங்கு திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

வீட்டில் சிறுமி மட்டும் இருக்கும்பொழுது வீட்டில் நுழைந்துள்ளார். பிரபாகரன் யாரும் இல்லாததை அறிந்து கொண்டு வந்துள்ளதாக சொல்லப்படுகின்றது. அப்பொழுது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதனால் கூச்சலிட்ட சிறுமியின் அலறலை கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்துள்ளனர். அதனை கண்ட பிரபாகரன் தப்பி ஓடி ஒளிந்து உள்ளார்.

இதனையடுத்து தாயார் மற்றும் அவரது உறவினர்கள் பிரபாகரனை தேடி சென்றிருக்கின்றனர். அப்போது திருவான்மியூர் பகுதியில் நின்று கொண்டிருந்த பிரபாகரனை பார்த்ததும்  உறவினர்கள் அவரை தர்ம அடி அடித்துள்ளனர்.பின்பு தகவலறிந்த திருவான்மியூர் போலீசார் பிரபாகரனை மீட்டு விசாரணை நடத்தினர்.

அப்போதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. கோவிலுக்கு சொந்தமான இடத்தில் காவலாளியாக பணிபுரியும் இவருக்கும் பாலியல் தொந்தரவு கொடுத்த அந்த சிறுமியின் தாய்க்கும் கடந்த 3 ஆண்டுகளாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.

இதனால் அவரது வீட்டிற்கு தொடர்ந்து சென்று வந்துள்ள பிரபாகரன் அன்றைக்கு சிறுமியின் தாய் இல்லாததால் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது.

பின் பிரபாகரனை கிண்டியில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு திருவான்மியூர் போலீசார் அவரை அனுப்பிவைத்தனர். அங்கு அவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.