சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் பற்றி பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன. அமெரிக்காவில் ஆன் அண்ட் ராபர்ட் எச்.லூரி குழந்தைகள் ஆஸ்பத்திரியின் விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர் இந்த ஆய்வின் முடிவில் அதிர்ச்சியான தகவல் வெளியானது முதியவர்களுக்கு பரவியது போலவே குழந்தைகளுக்கும் பரவ அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பொதுமக்களிடையே கொரேனாவை பரப்புவதில் குழந்தைகள் முக்கியமான காரணமாக இருப்பார்கள். கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் போது குழந்தைகள் அதிக இடங்களில் பரப்ப வாய்ப்பு இருக்கிறது அதனால் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கும் போது நோய்த்தடுப்பு முயற்சிகளுக்கு எதிராக இருப்பார்கள் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.