நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. மளமளவென உயரும் தங்கம் விலை!

0
294
#image_title

நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி நியூஸ்.. மளமளவென உயரும் தங்கம் விலை!

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கத்தின் விலையால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர். திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் தை மாதத்தில் அதிகளவு நடைபெறுவதால் தங்கத்தின் விலை ஏற்றத்துடன் இருந்து வருகிறது.

நேற்று முன்தினம் தங்கம் கிராமுக்கு ரூ.5 குறைந்து விற்கப்பட்ட நிலையில் மீண்டும் விலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது.

நேற்று ஒரு நாளில் கிராமுக்கு ரூ.30 அதிகரித்த தங்கம் இன்று மேலும் ரூ.10 உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

22 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.5,880க்கு விற்ற நிலையில் இன்று ரூ.10 அதிகரித்து ரூ.5,890க்கு விற்பனையாகி வருகின்றது. சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.47,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் கோல்ட்: நேற்று ஒரு கிராம் ரூ.6,415க்கு விற்ற நிலையில் இன்று ரூ.10 அதிகரித்து ரூ.6,425க்கு விற்பனையாகி வருகின்றது. 8 கிராம் தங்கம் ரூ.80 அதிகரித்து ரூ.51,400க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி: நேற்று வெள்ளி விலை கிராமுக்கு 2 காசுகள் உயர்ந்த நிலையில் இன்று கிராமுக்கு 20 காசுகள் அதிகரித்து 1 கிராம் ரூ.78க்கும், 1000 கிராம் ரூ.78,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் நகை தேவை இருக்கும் மக்கள் கலக்கத்தில் இருக்கின்றனர்.