சென்னையிலிருந்து அயோத்தி வரை இயக்கப்படும் விமான சேவை! டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா?

0
386
#image_title

சென்னையிலிருந்து அயோத்தி வரை இயக்கப்படும் விமான சேவை! டிக்கெட் விலை இவ்வளவு ரூபாயா?

தற்பொழுது புதிதாக கட்டப்பட்ட அயோத்தி ராமர் கோயிலுக்கு சென்னையிலிருந்து நேரடியாக செல்லும் விமான சேவை கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது.

அயோத்தி நகரில் கடந்த சில ஆண்டுகளாக ராமர் கோயில் கட்டப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி அயோத்தியில் புதிதாக கட்டப்பட்ட பால ராமர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி உள்பட பல முக்கிய தலைவர்களும் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி சென்னைக்கும் அயோத்திக்கும் இடையே நேரடி விமான சேவை நேற்று(பிப்ரவரி1) தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் இருந்து அயோத்திக்கு தொடங்கப்பட்ட இந்த விமானத்தில் முதல் நாளே 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

இந்த விமான சேவை சென்னையிலிருந்தும் அயோத்தியில் இருந்தும் தினமும் உள்ளது. அதன்படி சென்னையில் பகல் 12.50 மணிக்கு புறப்படும் விமானம் அயோத்திக்கு 3.25 மணிக்கு சென்றடையும். அதே போல மறுமார்க்கமாக அயோத்தியில் இருந்து மாலை 4.10க்கு புறப்படும் விமானம் மாலை 6.40 மணிக்கு சென்னையை வந்தடையும்.

சென்னையில் இருந்து அயோத்திக்கு இயக்கப்படும் இந்த விமானத்தில் பயணம் செய்ய ஒரு நபருக்கு 5810 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் வரிகள் தனியாக வசூல் செய்யப்படுகின்றது. இந்த கட்டணம் நிலையானது அல்ல. பயணிகளின் எண்ணிக்கை, நேரம், டிக்கெட் முன்பதிவு ஆகியவற்றை பொறுத்து டிக்கெட் விலை மாறுபடும்.