அயோத்தி ராமர் கோயிலை தோண்டினால் இது தான் இருக்கும்! இழிவுபடுத்தி சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ் ராஜ்..!

0
305
#image_title

அயோத்தி ராமர் கோயிலை தோண்டினால் இது தான் இருக்கும்! இழிவுபடுத்தி சர்ச்சையில் சிக்கிய பிரகாஷ் ராஜ்..!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடந்த ஜனவரி மாதம் 22 அன்று பிரமாண்ட ராமர் கோயில் திறக்கப்பட்டது. பிரதமர், மத்திய அமைச்சர்கள், முக்கிய விஐபிகள் பலர் திறப்பு விழாவில் பங்கேற்றனர். திறப்பு விழாவை காண லட்சக்கணக்கான பக்தர்கள் அயோத்தியில் குவிந்தனர்.

நாட்டு மக்கள் ராமர் கோயில் திறப்பு விழாவை பண்டிகை போல் கொண்டாடுவதற்கு பின்னால் ஒரு நீண்ட நெடிய வரலாறு இருக்கின்றது. பல கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த ராமர் கோயில் அமைந்துள்ள இடத்தில் இதற்கு முன் பாபர் மசூதி இருந்தது.

ராமர் கோயில் வரலாறு…

கடந்த 500 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த ராமர் கோயிலை இடித்து முகலாயர்கள் பாபர் மசூதி காட்டினர். இதனால் இந்துக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இடையே வன்முறை சண்டைகள் நீண்ட காலமாக தொடர்ந்தது.

ராமர் கோயில் – பாபர் மசூதி விவகாரம் நீதிமன்றத்தில் தொடர்ந்து வழக்காடப்பட்டு வந்த நிலையில் கடந்த 1992 ஆம் ஆண்டு பாஜக ஆட்சியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது.

இந்த விவகாரம் சர்ச்சையாக வெடித்த நிலையில் பல விசாரணைகள் நடைபெற்று கடந்த 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த வழக்கிற்கு விடிவு காலம் பிறந்தது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோயில் கட்ட உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதேசமயம் இஸ்லாமியர்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் நிலம் வழங்கவும் உத்தரவிட்டது.

பல சர்ச்சைகள், சட்ட போராட்டங்களை கடந்து தான் இன்று அயோத்தியில் ராமர் கம்பீரமாக காட்சியளிக்கிறார். நாள்தோறும் லட்ச கணக்கான பக்தர்கள் அயோத்தி ராமரை தரிசித்து வருகின்றனர்.

இந்நிலையில் அயோத்தி ராமர் கோயிலை தோண்டினால் புத்தர் சிலைகள் தான் தெரியும் என்று நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்து இருப்பது சர்ச்சையாகி இருக்கின்றது.

பாஜகவிற்கு எதிராக பல சர்ச்சை கருத்துக்களை தெரிவித்து வரும் பிரகாஷ் ராஜ் அவர்கள்
மசூதியை தோண்டினால் கோவில்கள் தெரியும் என்றால்.. கோவில்களை தோண்டினால் புத்தர் சிலைகள் தான் தெரியும்.. என தெரிவித்து இருப்பது இந்து மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

இந்து மதத்தையும், இந்து மக்களையும் இழிவுபடுத்தி கருத்துக்கள் தெரிவிப்பது தொடர்கதையாகி வரும் நிலையில்… நடிகர் பிரகாஷ் ராஜ் அவர்களின் இந்த கருத்திற்கு பல தரப்பில் இருந்து கண்டம் வலுத்து வருகின்றது.