சிறுநீரக கற்கள் அனைத்தும் கரைய வேண்டுமா!!? அப்போ இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிங்க!!!
நம்மில் சிலருக்கு சிறுநீரக கற்கள் இருக்கும். அந்த சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற பார்லி தண்ணீரை வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும். மேலும் பார்லி தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பார்லி என்பது தானியங்கள் கொண்டு செய்யப்படும் உணவுப் பொருள் ஆகும். இந்த பார்லியில் நம் உடலுக்கு தேவையான பல சத்துக்கள் இருக்கின்றது. பார்லியை நாம் சாப்பிடும் பொழுது உடலில் ஏற்படுகின்ற பலவிதமான பிரச்சனைகள் சரியாகின்றது.
பார்லியில் வைட்டமின் சத்துக்களும், மினரல் சத்துக்களும் அதிகளவில் இருக்கின்றது. அதோடு பார்லியில் கால்சியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ், காப்பர் ஆகிய சத்துக்களும் இருக்கின்றது. பார்லியில் நார்ச்சத்து அதிக அளவில் உள்ளது. பார்லியை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றது. மேலும் பார்லியை ஊற வைத்த தண்ணீரை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் அவர்களுக்கு பல பிரச்சனைகள் தீரும். பார்லி தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
பார்லி தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்…
* பார்லியில் கால்சியம் சத்துக்கள் இருப்பதால் பார்லி தண்ணீரை குடிக்கும் பொழுது நமது பற்களுக்கு நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். மேலும் நமது எலும்புகள் வலிமை பெறும்.
* பார்லி தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நமது சருமத்திற்கு பாதுகாப்பானது. நமது முகத்திற்கு சிவப்பு நிற பொலிவை இது தருகின்றது. இது சரும அமைப்பை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல் சருமத்திற்கு புத்துணர்ச்சியை அளிக்கின்றது.
* பார்லி தண்ணீரை வெறும் வயிற்றில் குடிக்கும் பொழுது நமது உடலில் இரத்த சர்க்கரை அளவை குறைக்கின்றது.
* பார்லி தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் பொழுது உடலில் இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால் அனைத்தையும் கரைத்து வெளியேற்றுகின்றது. இதனால் உடல் எடை குறைகின்றது.
* பார்லி தண்ணீரை குடிப்பதால் உடல் சூடு குறைகின்றது. மேலும் உடல் குளிர்ச்சி அடைகின்றது.
* பார்லி தண்ணீரை குடித்து வந்தால் நமக்கு சிறுநீர் அதிகமாக வெளியேறும். இதனால் உடலில் உள்ள நச்சுக்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு சிறுநீர் வழியாக வெளியேற்றப்படுகின்றது. இதனால் உடலில் உள்ள நச்சுகள் அனைத்தும் அழிந்து உடல் சுத்தம் அடைகின்றது.
* நமது சிறுநீரகத்தில் படிகங்கள் சேர்ந்துவிடுவதால் சிறுநீரக கற்கள் உருவாகின்றது. எனவே காலை நேரத்தில் வெறும் வயிற்றில் பார்லி தண்ணீர் குடிக்கும் பொழுது படிகங்கள் சேர்வது தடுக்கப்பட்டு சிறுநீரக கற்கள் உருவாவது தடுக்கப்படுகின்றது.