வடசென்னை படம், ஒரு இந்தி படத்தின் காப்பியா?

0
34
#image_title

வடசென்னை படம், ஒரு இந்தி படத்தின் காப்பியா?

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற வடசென்னை படம், நடிகர் சித்தார்த் நடித்த இந்தி படத்தின் காப்பி என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

கடந்த 2018ஆம் ஆண்டு வெளியான படம் வடசென்னை. நடிகர் தனுஷ், பொல்லாதவன் கிஷோர், டேனியல் பாலாஜி, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்த படம் வடசென்னை. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கிய இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

இந்தப் படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. கடந்த 2018 ஆம் ஆண்டில் சிறந்த படமாக தமிழ் சினிமா ரசிகர்கள் வடசென்னை படத்தை அங்கீகரித்தனர். தற்போது வரை கூட இயக்குநர் வெற்றிமாறன் அவர்களிடம் வடசென்னை படத்தின் 2ம் பாகம் எப்போது வரும்? எப்போது எடுப்பீர்கள்? கதை எழுதி முடித்து விட்டீர்களா? என்று தான் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போதைய வடசென்னை படம் நடிகர் சித்தார்த் அவர்களின் நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான “Striker” படத்தின் காப்பி என்று தகவல் வெளியாகி உள்ளது.

இந்தப் படத்தையும், வடசென்னை படத்தையும் ஒப்பிட்டால் 80 சதவீதம் பொருந்தியுள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

“Striker ” படத்திலும் ரவுடிசம், கேங்- வார், ஒடுக்கப்பட்ட மக்கள்,  கேரம் விளையாட்டு என பாதி படத்தின் கதை ஒத்துப்போவதாக உள்ளது. இதனை வைத்து பார்க்கும் போது இயக்குநர் வெற்றிமாறன் அவர்கள் வடசென்னை படத்திற்கான கதையை இதில் இருந்து எடுத்திருக்கலாம் என்றும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர். இருப்பினும் பெரும்பாலானோர் இயக்குநர் வெற்றிமாறன் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

author avatar
Parthipan K