இடுப்புக்கு கீழ் முடியின் நீளம் இருக்க வேண்டுமா? அப்போ இந்த 2 பொருட்களை அங்கு தடவுங்கள்..!!

Photo of author

By Divya

இடுப்புக்கு கீழ் முடியின் நீளம் இருக்க வேண்டுமா? அப்போ இந்த 2 பொருட்களை அங்கு தடவுங்கள்..!!

பெண்களின் அழகை வெளிப்படுத்துவதில் தலை முடி முக்கிய பங்கு வகிக்கின்றது. தற்பொழுது நாம் வாழ்ந்து வரும் வாழ்க்கை முறை, உணவு முறை எல்லாம் மாறிவிட்டதால் முடி உதிர்தல், இளநரை உள்ளிட்ட பிரச்சனைகள் சாதாரண ஒன்றாகிவிட்டது.

இதற்காக பல வழிமுறைகளை நாம் மேற்கொண்டாலும் பலன் கிடைத்தபாடு இல்லை. தினமும் ஒரு வழிகளை பின்பற்றி அழுத்துப்போன உங்களுக்கான ஒரு அற்புத மூலிகை எண்ணெய் குறிப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதை தயாரிப்பது மிகவும் சுலபம் அதே சமயம் கிடைக்கும் பலன் அதிகம்.

தேவையான பொருட்கள்:-

*வெந்தயம் – 1 தேக்கரண்டி

*கருஞ்சீரகம் – 1 தேக்கரண்டி

செய்முறை…

ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 8 மணி நேரத்திற்கு ஊற விடவும்.

பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் 1 தேக்கரண்டி கருஞ்சீரகம் சேர்த்து பொடித்து ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும். அடுத்து ஊறவைத்துள்ள வெந்தயத்தை மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து கொள்ளவும்.

இதை கருஞ்சீரகப் பொடியில் சேர்த்து நன்கு கலந்து தலை முடிகளின் வேர்காள் பகுதியில் படும்படி தடவி 1 மணி நேரம் ஊறவிடவும். பின்னர் தலை முடியை நன்கு அலசிக் கொள்ளவும். இவ்வாறு வாரத்திற்கு 2 அல்லது 3 முறை செய்து வருவதன் மூலம் தலை முடி நீளம் அதிகரிக்கும்.