தைராய்டு பிரச்சனை ஒரு வாரத்தில் குணமாக எளிய வீட்டு வைத்தியம்!

0
194
#image_title

தைராய்டு பிரச்சனை ஒரு வாரத்தில் குணமாக எளிய வீட்டு வைத்தியம்!

நவீன உலகில் தைராய்டு பாதிப்பு அதிகளவு ஏற்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகளில் ஒன்றாக தைராய்டு இருக்கிறது. இந்த தைராய்டை எந்த பக்க விளைவுகளும் இல்லாத மூலிகை வைத்தியம் மூலம் குணப்படுத்திக் கொள்ள முடியும்.

தேவையான பொருட்கள்:-

அமுக்ரா கிழங்கு பொடி – 1 தேக்கரண்டி
நாவல் விதை பொடி – 1 தேக்கரண்டி
பெரிய நெல்லிக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
கடுக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி
தான்றிக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி

இந்த பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கி பயன்படுத்தவும்.

செய்முறை:-

அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பிறகு அதில் அமுக்ரா கிழங்கு பொடி, நாவல் விதை பொடி, பெரிய நெல்லிக்காய் பொடி, கடுக்காய் பொடி, தான்றிக்காய் பொடி சேர்த்து மிதமான தீயில் வைத்து காய்ச்சவும். 1 கப் தண்ணீர் 1/2 கப்பாக வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.

இந்த பானத்தை ஒரு கிளாஸுக்கு ஊற்றி குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனைக்கு முழுமையாக தீர்வு கிடைக்கும்.