பணத்தை வேகமாக.. சுலபமான முறையில் சேமிக்க சிம்பிள் ட்ரிக்ஸ்!

Photo of author

By Divya

பணத்தை வேகமாக.. சுலபமான முறையில் சேமிக்க சிம்பிள் ட்ரிக்ஸ்!

ஒருவர் பணத்தை வேகமாக சேமிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு முதலில் கடன் இருக்கக் கூடாது. கடன் பட்டவர்கள் கடனை அடைக்காமல் சேமிப்பை தொடங்குவதால் எந்த பயனும் இருக்காது. எனவே முதலில் கடனை அடைத்துவிட்டு பின்னர் எதிர்கால சேமிப்பை தொடங்குங்கள்.

எந்த ஒரு கெட்ட பழக்கமும் இல்லாதவர்களால் பணத்தை விரைந்து சேமிக்க முடியும். குடி பழக்கம், புகை பழக்கம், தேவையில்லா செலவு செய்பவர்களால் பணத்தை ஒருபோதும் சேமிக்க முடியாது.

பட்ஜெட் போட்டு செலவு மேற்கொள்பவர்களால் மட்டுமே பணத்தை அதிகளவில் சேமிக்க முடியும். எனவே மாத தொடக்கத்தில் குடும்ப பட்ஜெட்டை எழுதி வைத்து செலவு செய்யவும்.

வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டும். ஒருவர் சம்பளத்தை சேமிப்பிற்கும் மற்றொருவர் பணத்தை செலவிற்கும் பயன்படுத்த வேண்டும்.

பணத்தை சேமிக்க முடியும் என்ற நேர்மறை எண்ணங்களை கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு இருந்தால்’மட்டுமே அதிகளவு பணத்தை விரைவாக சேமிக்க முடியும்.