10 பைசா செலவில்லாமல் கரப்பான் பூச்சி மற்றும் பல்லியை ஓட ஓட விரட்ட எளிய வழி!!

Photo of author

By Divya

10 பைசா செலவில்லாமல் கரப்பான் பூச்சி மற்றும் பல்லியை ஓட ஓட விரட்ட எளிய வழி!!

நம்மில் பலர் வீட்டு சமையலறையில் கரப்பான் பூச்சி மற்றும் பல்லி தொல்லை அதிகளவில் இருக்கும்.

இதை சரி செய்ய நாம் கடையில் உள்ள இரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை விட வீட்டில் உள்ள அந்துருண்டை மற்றும் வெங்காயம் உள்ளிட்ட பொருட்களை வைத்து கரப்பான் பூச்சி மற்றும் பல்லி தொல்லைக்கு ஒரே நாளில் குட் பாய் சொல்லிவிடலாம்.

தேவையான பொருட்கள்:-

*பெரிய வெங்காயத் தோல் – தேவையான அளவு

*பூண்டு தோல் – சிறிதளவு

*அந்துருண்டை – 2 (இடித்தது)

*காட்டன் துணி – 1

செய்முறை:-

முதலில் ஒரு பேப்பரில் 2 அந்துருண்டைகளை போட்டு தூள் செய்து கொள்ளவும். பின்னர் ஒரு காட்டன் துணியில் தூள் செய்து வைத்துள்ள அந்துருண்டையை போட்டுக் கொள்ளவும்.

அடுத்து பெரிய வெங்காயத்தின் தோல் மற்றும் பூண்டின் தோலை அதில் போட்டு மூட்டை கட்டவும். இதை சமையலறையில் உள்ள ஜன்னல்களில் கட்டி தொங்க விடவும். இந்த வாசனை கரப்பான் பூச்சி, பல்லிக்கு ஆகாது. எனவே சமையலறையில் அதன் தொல்லை இனி இருக்காது.

மற்றொரு தீர்வு:-

தேவையான பொருட்கள்:-

*பெரிய வெங்காயம் – 1

*அந்துருண்டை – 2

செய்முறை:-

பெரிய வெங்காயத்தை தோல் நீக்கி இரண்டாக நறுக்கி கொள்ளவும். அடுத்து ஒரு பேப்பரில் 2 அந்துருண்டைகளை போட்டு தூள் செய்து கொள்ளவும். இதை அறிந்து வைத்துள்ள வெங்காயத்தில் தடவி கேஸ் அடுப்பு, சிங்க் உள்ளிட்ட கரப்பான் பூச்சி மற்றும் பல்லி நடமாடும் பகுதியில் வைத்தால் அவை தெறித்தோடி விடும்.