கை மற்றும் கால் நகங்கள் சுத்தமாக சிம்பிள் வழிகள்!!

0
450
#image_title

கை மற்றும் கால் நகங்கள் சுத்தமாக சிம்பிள் வழிகள்!

கை, கால் நகங்கள் ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருந்தால் தான் நோய் பாதிப்பு ஏற்படாது. நம் உடலுக்குள் நகங்கள் மூலம் தான் கிருமிகள் செல்கின்றது. வாரம் ஒருமுறை நகத்தை வெட்டுவது மிகவும் நல்லது.

நகத்தின் உள் இருக்கும் அழுக்கை நீக்குவது மட்டும் இன்றி நகத்தின் மேல் உள்ள அழுக்கை நீக்கி கொள்வது நல்லது.

நகத்தை பராமரிக்காமல் விட்டால் அவை விரைவில் நோய் பாதிப்புக்கு ஆளாகி விடும். அதாவது பொலிவற்று, அழுக்கு படிந்து காணப்படும்.

அழுக்கு படிந்த நகங்களை சுத்தம் செய்வது என்பது கடினமான ஒன்று அல்ல. கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றினால் போதுமானது.

தீர்வு 01:-

*ஆலிவ் எண்ணெய்
*பூண்டு

தேவையான அளவு ஆலிவ் எண்ணெயை வாணலியில் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொள்ளவும். 2 பல் பூண்டை தோல் நீக்கி இடித்து அதில் சேர்த்து காய்ச்சி ஆறவிடவும்.

இந்த எண்ணெயை கை, கால் நகங்களின் மேல் அப்ளை செய்து வர நகத்தில் உள்ள அழுக்கு, விரிசல் நீங்கி பளபளப்பாக மாறும்.

தீர்வு 02:-

*எலுமிச்சை சாறு
*உப்பு

இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறில் சிறிது கல் உப்பு சேர்த்து கரைத்து கை, கால் நகங்களின் மேல் தடவி வர அவை சுத்தமாகும்.

தீர்வு 03:-

*தேங்காய் எண்ணெய்

ஒரு தேக்கரண்டி அளவு தேங்காய் எண்ணெய் எடுத்து கை, கால் நகங்களில் பூசினால் அவை விரைவில் பளிச்சென்று மாறிவிடும்.

தீர்வு 04:-

*மருதாணி
*வேப்பிலை

மருதாணி மற்றும் வேப்பிலை சம அளவு எடுத்து அரைத்து கை, கால் நகங்களில் பூசி வந்தால் நக சொத்தை, அழுக்கு, விரிசல் நீங்கி நகம் சுத்தமாகும்.

Previous articleசர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க இந்த மூலிகை பொடியை மட்டும் பயன்படுத்துங்கள்!
Next articleபோஸ்ட் ஆபிஸில் சூப்பர் வேலை! 8 ஆம் வகுப்பு படித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்!