இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களை வீட்டை விட்டு துரத்த எளிய வழிகள்!! 100% தீர்வு நிச்சயம்!!
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல் கொசுக்கள் அளவில் சிறியவை என்றாலும் அவை உயிருக்கே ஆபத்து ஏற்படுத்த கூடிய டெங்கு,மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புகளை உருவாக்கும் தன்மை கொண்டது.தற்பொழுது மழைக்காலம் என்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிமாகி விட்டது.இதனால் டெங்கு காய்ச்சல் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.வீடுகளில் கை குழந்தைகள் வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
கொசுக்களை கொல்ல இரசாயனம் கலந்த ஆல் அவுட்,கொசுவர்த்தி உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதை விட வீடுகளில் உள்ள பொருட்களை வைத்து எளிய முறையில் அனைத்து கொசுக்களையும் சில நிமிடத்தில் கொன்று விடலாம்.இதனால் நமக்கு எந்த ஒரு பக்க விளைவுகளும் வராது.
தேவையான பொருட்கள்:-
வேப்பெண்ணெய் – 2 முதல் 3 தேக்கரண்டி
கட்டி சாம்பிராணி – 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் – 1
விளக்கு திரி – 1
செய்முறை:-
ஒரு தாளிப்பு கரண்டி எடுத்து அதில் வேப்பெண்ணெய் 2 அல்லது 3 தேக்கரண்டி ஊற்றவும்.பின்னர் அதில் கட்டி சாம்பிராணி தூள் செய்து 2 தேக்கரண்டி போட்டு கலக்கி கொள்ளவும்.
இதை அடுப்பில் மிதமான தீயில் சூடு படுத்தவும்.பின்னர் அடுப்பை அணைக்கவும்.
அதன் பின் ஒரு பெரிய வெங்காயத்தை எடுத்து மேல் பகுதியில் குழி செய்து கொள்ளவும்.
மண் விளக்கை போல் குழி செய்து வைத்து கொள்ளவும்.
பின்னர் அதில் விளக்கு திரி ஒன்றை வைத்து காய்ச்சி வைத்துள்ள வேப்பெண்ணெய் + சாம்பிராணி பொடி கலவையை ஊற்றி திரியை பற்ற வைக்கவும்.
பெரிய வெங்காயத்தில் இருந்து எண்ணெய் வெளியே வழிந்து வரும் என்பதினால் வெங்காயத்தை ஓரு தட்டில் வைத்து விளக்கு பற்ற வைக்கவும்.
இதன்படி செய்தோம் என்றால் வீட்டில் வீட்டில் ஒளிந்துள்ள கொசுக்கள் உடனடியாக வெளியேறி விடும்.அதேபோல் வீட்டின் உள்ளும் எந்த ஒரு கொசுவும் வராது.அதேபோல் சாம்பிராணிக்கு பதில் பூஜைக்கு பயன்படுத்தும் கற்பூரத்தை கூட பயன்படுத்தலாம்.
மற்றொரு முறை:-
தேவையான பொருட்கள்:-
*எலுமிச்சை
*கிராம்பு(இலவங்கம்)
செய்முறை:-
ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி கொள்ளவும்.அதில் பிரியாணி உள்ளிட்ட சமையலுக்கு பயன்படுத்தும் வாசனை மிகுந்த இலவங்கத்தை(கிராம்பு) சொருகி வைக்கவும்.பின்னர் வீட்டில் கொசுக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளில் வைத்தால் உடனடியாக கொசுக்கள் வீட்டை விட்டு வெளியேறி விடும்.
மற்றொரு முறை:-
தேவையான பொருட்கள்:-
*மண் விளக்கு – 1
*சாம்பிராணி – 1
*வேப்பிலை – 5 அல்லது 6 இலைகள்
*பூண்டு – 1
செய்முறை:-
ஒரு மண் விளக்கு எடுத்து அதில் சாம்பிராணி 1 சேர்க்கவும்.அதை பற்ற வைக்கவும்.பின்னர் அதன் மேல் 5 அல்லது 6 இலைகளை சேர்க்கவும்.பின்னர் 1 பூண்டு பல்லை சிறிதளவு நசுக்கி அந்த விளக்கின் மேல் சேர்க்கவும்.இப்படி செய்யும் பொழுது எரிந்து கொண்டிருக்கும் சாம்பிராணியில் இருந்து புகை வரும்.இந்த புகையால் கொசுக்கள் வீட்டை விட்டு வெளியேறி விடும்.அதேபோல் வீட்டிற்குள் எந்த கொசுவும் வராது.