மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!?

0
41
#image_title

மூலநோய்க்கு சிறந்த தீர்வு அளிக்கும் கருணைக்கிழங்கு பொடி!!! இதை எவ்வாறு செய்வது!!?

மூலநோய்க்கு மருந்தாக பயன்படும் கருணைக்கிழங்கு பொடியை தயார் செய்ய தேவையான பொருட்கள் பற்றியும் எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றியும் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

பொடிகளில் பல வகைகள் உள்ளது. கருவேப்பிலை பொடி, இட்லி பொடி, பாகற்காய் பொடி, தனியா இட்லி பொடி, கருப்பு உளுந்து பொடி என்று பல வகைகள் இருக்கின்றது. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு நன்மைகள் இருக்கின்றன. அந்த வகையில் மூல நோய்க்கு பலன் தரும் கருணைக் கிழங்கு பொடியை எவ்வாறு தயார் செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.

கருணைக் கிழங்கு செய்ய தேவையான பொருட்கள்…

* கருணைக்கிழங்கு
* மிளகு
* தனியா
* கல் உப்பு
* நல்லெண்ணெய்

செய்முறை…

முதலில் கருணைக்கிழங்கை சுத்தப்படுத்தி வேக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதன் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வெயிலில் நன்கு காய வைக்க வேண்டும். ஈரத்தன்மை இல்லாத அளவிற்கு இதை நன்கு காய வைக்க வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியில் மிளகு, தனியா, கல் உப்பு சேர்த்து நன்கு வறுத்து கொள்ள வேண்டும். பின்னர் இதை இறக்கி வைத்து விட்டு வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து வெயிலில் காயவைத்த கருணைக்கிழங்கை வாணலியில் போட்டு கிழக்கும் வரை வறுக்க வேண்டும்.

சூடு ஆறிய பின்னர் வறுத்த கருணைக்கிழங்கு, தனியா, மிளகு, கல் உப்பு ஆகியவற்றை மிக்சி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். கருணைக் கிழங்கு பொடி தயார்.

இதை சுடு சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடலாம். இதனால் மூலநோய் குணமாக வாய்ப்பு இருக்கின்றது. மேலும் கருணைக்கிழங்கு லேகியம் சாப்பிட்ட அளவுக்கு பலன் கிடைக்கும். மூலநோய்க்கு மட்டும் இந்த கருணைக்கிழங்கு பொடி சிறந்த மருந்து அல்ல. மலச்சிக்கல் உள்ளவர்களும் கருணைக்கிழங்கு பொடி செய்து சாப்பிடலாம்.