பற்களில் படிந்து கிடக்கும் மஞ்சள் கறைகள் நீங்க எளிய வழிகள்..!!

Photo of author

By Divya

பற்களில் படிந்து கிடக்கும் மஞ்சள் கறைகள் நீங்க எளிய வழிகள்..!!

நம் ஒவ்வொருக்கும் பல் மிகவும் முக்கியமான உடல் உறுப்பாக இருக்கிறது. பல் இல்லாவிட்டால் உணவை மென்று விழுங்குவதில் சிரமம் ஏற்படும். இதனால் செரிமானப் பிரச்சனை, மலச்சிக்கல் என்று உடல் உபாதைகளை சந்திக்க நேரிடும்.

அதுமட்டும் இன்றி பற்கள் வெண்மையாக இருந்தால் அவை நம் அழகை இன்னும் கூட்டும் விதமாக இருக்கும். ஆனால் இன்றைய கால வாழ்க்கை முறையில் பெரும்பாலானோர் பற்களை முறையாக பராமரிப்பது கிடையாது இதனால் பல்லில் மஞ்சள் கறை ஏற்ப்பட்டுவிடுகிறது.

பற்களில் மஞ்சள் கறை காணப்பட காரணங்கள்:-

*முறையற்ற பல் பராமரிப்பு

*தினமும் அதிகளவு டீ, காபி பருகுவது

*சிகிரெட் பிடிப்பது

*சாப்பிட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது

*வயது முதுமை

*பரம்பரை தன்மை

பல் மஞ்சள் கரையை நீக்க எளிய வழிகள்…

1)தினமும் 2 கொய்யா இலையை வாயில் போட்டு மென்று வர பல் மஞ்சள் கறை நீங்கும்.

2)கற்றாழை ஜெல்லை பல்லில் தேய்த்து வருவதன் மூலம் மஞ்சள் கறை நீங்கும்.

3)சிறிதளவு வெள்ளை வினிகரில் 1 ஸ்பூன் உப்பு சேர்த்து பற்களை தேய்த்து வருவதன் மூலம் மஞ்சள் கறை நீங்கும்.

4)1/2 ஸ்பூன் பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து பற்களை தேய்த்து வந்தால் மஞ்சள் கறை நீங்கி விடும்.

5)சிறிதளவு உப்பை பல் துலக்கும் பிரஸில் வைத்து தேய்த்து வந்தோம் என்றால் மஞ்சள் கறை நீங்கி விடும்.

6)டூத் பேஸ்ட் உடன் சாம்பல் கலந்து பற்களை தேய்த்து வந்தால் மஞ்சள் கறை நீங்கி விடும்.

7)ஆரஞ்சு தோலை பற்களில் தேய்த்து சுத்தம் செய்வதன் மூலம் மஞ்சள் கறை நீங்கும்.