பொய் சொல்லி சான்ஸ் வாங்கிய சிவகார்த்திகேயன்.. அவரே சொன்ன உண்மை!

0
145
#image_title

பொய் சொல்லி சான்ஸ் வாங்கிய சிவகார்த்திகேயன்.. அவரே சொன்ன உண்மை!

சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு பயணம் சென்ற பெரும்பாலானவர்கள் திரைத்துறையில் தங்களின் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு பல போராட்டங்களை கடந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன், சில மேடை நிகழ்ச்சிகளிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணிபுரிந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உருவெடுத்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன், முதன் முதலில் வெள்ளி திரையில் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் தான் மெரினா. இந்த படம் கடந்த 2012 ஆம் ஆண்டில் பாண்டி ராஜ் இயக்கத்தில் வெளியானது. பின்னர் அதே ஆண்டில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தில் தனுஷின் நண்பராக நடித்திருப்பார். இதற்கிடையில் கடந்த 2008 ஆம் ஆண்டு அஜித் மற்றும் நயன்தாரா கூட்டணியில் வெளியான ஏகன் திரைப்படத்தில் மிகச் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன்.

அதைத் தொடர்ந்து வெளியான எதிர்நீச்சல் மற்றும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஆகிய திரைப்படங்கள் தான் சிவகார்த்திகேயன், மக்கள் மனதில் ஊடுருவ காரணமாக அமைந்தது. தொடர்ந்து காக்கிச்சட்டை, ரெமோ, வேலைக்காரன், நம்ம வீட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மக்கள் சிவகார்த்திகேயனை தங்கள் வீட்டில் ஒருவராக நினைக்கும் அளவிற்கு மாறினார்.

இடையிடையில் பல படங்கள் தோல்வி படங்களாக அமைந்தாலும் டாக்டர், மாவீரன் உள்ளிட்ட படங்கள் அவரை பாக்ஸ் ஆபீஸ் மன்னனாக மாற்றியது. மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் திரைப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக நிலவி வருகிறது.

சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து தனது 23வது படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

இவ்வாறு படிப்படியாக முன்னேறி ஆரம்பத்தில் சின்னத்திரையில் ஆயிரமாக சம்பளம் வாங்கிய சிவகார்த்திகேயன் தற்பொழுது கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன்பாக நேர்காணல் ஒன்றில் சிவகார்த்திகேயன் மெரினா படத்தில் தனக்கு எப்படி சான்ஸ் கிடைத்தது என்பது குறித்தும் ஓவியா முன்னால் வீலிங்க் செய்யும் காட்சிகள் குறித்தும் பேசியிருக்கிறார். அப்போது சிவகார்த்திகேயனிடம் உங்களுக்கு நிஜமாகவே வீலிங்க் செய்ய தெரியுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு சிவகார்த்திகேயன், “எனக்கு வீலிங்க் பண்ண தெரியாது. அந்த படத்தில் கமிட்டாகும்போது ஆக்டிங் அதெல்லாம் ஓகே ஃபீலிங் பண்ண தெரியுமா? என்று இயக்குனர் பாண்டி ராஜ் சார் கேட்டார். காலேஜ் டைமில் பண்ணியிருக்கிறேன் சார் அதனால டக்குனு கத்துக்கிட்டு பண்ணிடுவேன் சார் என்று சொன்னேன்.

நமக்கு இன்னும் ஒரு வாரம் டைம் இருக்கு அதுக்குள்ள கற்றுக் கொள்ளலாம் பிரச்சனை இல்லை என்று பாண்டி ராஜ் சார் சொன்னார். சரி சார் சரி சார் என்று சொல்லிவிட்டேன். ஒரு நாள் வீலிங்க் பண்ண சொன்ன போது வண்டியில் இருந்து சவுண்ட் மட்டும் தான் வருகிறது வண்டி நகரவே இல்லை. உடனே பாண்டி ராஜ் சார் ஏன்டா பொய் சொல்லி சான்ஸ் வாங்கியிருக்கியா நீ என்பது போல் முறைத்து பார்த்தார். அதன் பிறகு தான் நான் இதையே கான்செப்ட்டா வச்சு ஒரு டூப் வச்சுக்கலாமே சார் என்று கேட்டேன். அதன் பிறகு தான் அந்த காட்சியில் டூப் வைத்து பண்ணோம்” என்று கலகலப்பாக பதிலளித்துள்ளார்.

Previous articleஇனி திருச்சியில் இருந்து நேரடியாக வியட்நாம் செல்லலாம்! விமான சேவையை தொடங்கிய வியட் ஜெட்!!
Next articleஅடுத்த குறி இவருக்கு தான்.. அமைச்சர் எ.வ வேலு வீடு மற்றும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!!