சென்சார் அதிகாரி மேல் அதை தூக்கி எறிந்த எஸ் ஜே சூர்யா!! வெளியான சுவாரசிய தகவல்!!
நடிப்பு அரக்கன் என்று அழைக்கப்படும் இவர் தமிழ் திரையுலகில் மிகக் குறைவான படங்களை இயக்கியுள்ளார். ஆனால் இவர் இயக்கிய பாதி திரைப்படமும் சூப்பர் ஹிட் திரைப்படங்களாகும்.
முதலாவதாக அஜித்தை வைத்து வாலி திரைப்படத்தை இயக்கினார். இந்த படத்திற்காக அவர் சம்பளமே வாங்கவில்லை என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது
அடுத்ததாக விஜய்,மற்றும் ஜோதிகாவை வைத்து,குஷி திரைப்படத்தை இயக்கினார். இந்த படமும் சூப்பர் டூப்பர் ஹிட். இந்த படத்திற்குப் பிறகு அவர் லட்சங்களில் படங்களை இயக்க தொடங்கினர். அவர் வாங்கின முதல் பணத்தில் அவரது உதவி இயக்குநர்கள் 7 பேருக்கு பைக் வங்கி கொடுத்ததாக தகவல்கள் வெளியானது. இந்த செய்தியைக் கேட்ட பலரும் அவரை பாராட்டி வருகின்றன.
சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி திரைப்படத்திலிருந்து இவருக்கு நடிப்பு அரக்கன் என்ற பெயர் உருவாகியுள்ளது. இந்த திரைப்படத்திலும் இவரது சூப்பரான நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியிருப்பார்.
2004 ஆம் ஆண்டு வெளியான நியூ என்ற திரைப்படத்தை இயக்கி,அந்த படத்தில் அவரே நடித்திருப்பார். அக்காலத்தில் தொழில்நுட்பம்,சரியாக அமையவில்லை என்றாலும் அறிவியலை தொடர்புப்படுத்திய படத்தை இயக்குவது அவ்வளவு எளிதானதல்ல. இருந்தாலும் எஸ்.ஜே.சூர்யா நியூ படத்தில் அந்த முயற்சியை செய்து அதில் வெற்றி பெற்றார்.
இந்த திரைப்படத்திற்காக சென்சார் அதிகாரியை எஸ்.ஜே.சூர்யா அடிக்க சென்றதாகத் தவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தில் அடால்ட் காட்சிகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்.அதனால் சென்சார் அதிகாரிகளில் பெண் ஒருவர் இந்த படத்திற்கு u சான்றிதழ்களும் இல்லை, u1 சான்றிதழ்களும் இல்லை எனவும் கூறி, எஸ்.ஜே.சூர்யாவை கேவலமாக பேசியதாக தகவல்கள் வெளியானது.
அவ்வாறே ஆத்திரமடைந்த எஸ்.ஜே.சூர்யா கையில் வைத்து இருந்த செல் போனை தூக்கி அந்த அதிகாரியின் மேல் வீசியதாகவும்,ஆனால் அது அதிகாரியின் மேல் படவில்லை என்ற காரணத்தினால் போலீஸ் கேஸ் எதுவும் தரவில்லை என்று கூறப்படுகிறது.
எஸ்.ஜே.சூர்யாவுக்கு இப்படி இன்னொரு முகம் இருக்கிறதா என்று பலரும் ஆச்சரியத்தில் உள்ளனர்.