இனி யாரும் பாஜக குறித்து மூச்சு விட கூடாது – அதிமுக தலைமை கண்டிப்பு!!

0
139
#image_title

இனி யாரும் பாஜக குறித்து மூச்சு விட கூடாது – அதிமுக தலைமை கண்டிப்பு!!

தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி பிளவு குறித்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இந்த இரு கட்சிகளுக்கும் இடையே ஏற்கனவே கருத்து முரண்பாடு காணப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது அவை வெளிச்சத்திற்கு வந்துள்ளது.மேலிடத்தில் இணக்கமாக இருக்கும் அதிமுக,தமிழகத்தில் இருக்கும் பாஜகவிடம் அவ்வாறு இல்லை.காரணம் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் முரண்பட்ட கருத்து.கூட்டணியில் இருக்கும் போதே அதிமுக குறித்து கருத்து கூறி சர்ச்சையை கிளப்பி வந்த அண்ணாமலை அதற்கும் ஒருபடி மேலாக அறிஞர் அண்ணா குறித்து தெரிவித்து கூட்டணியில் பதற்றத்தை ஏற்படுத்தினார்.இதனால் கொந்தளித்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள்,அறிஞர் அண்ணா குறித்து பேச அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை.வரலாறு தெரியாமல் பேசக்கூடாது என்று தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர்.

மேலும் அரசியல் செய்ய தெரியாத அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி.அதிமுக இல்லாவிட்டால் நோட்டாவை விட குறைவான வாக்குகளை தான் அண்ணாமலை பெறுவார்.கூட்டணி கட்சியை விமர்சித்தால் தேர்தலில் தொண்டர்கள் எப்படி ஒன்றிணைந்து கட்சி பணி செய்வார்கள்? என்று தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்தனர்.இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தங்களை எதிர்ப்பவர்களுக்கு டிவிஏசி ரெய்டு உறுதி என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார் அண்ணாமலை.

இதனால் அதிமுக – பாஜகவிடையே நிலவி வந்த கருத்து மோதல் வெடித்து கூட்டணியில் பிளவு ஏற்படும் நிலைக்கு தள்ளியது.இந்நிலையில் நேற்று பாஜகவுடனான கூட்டணி முறிந்து விட்டதென்று முன்னாள் அமைச்சரும்,அதிமுக செய்தி தொடர்பாளருமான திரு.ஜெயக்குமார் தெரிவித்தார்.இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த பிரிவிற்கு நாடாளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீடே முக்கிய காரணம். இன்னைக்கு கூட்டணி முறிந்து விட்டதென்று சொல்லும் அதிமுக தேர்தல் நேரத்தில் இணைந்து கொள்ளும் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எந்த கருத்தும் தெரிவிக்காத நிலையில் இன்று அக்கட்சியின் தலைமை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது.

இனி கூட்டணி பற்றியோ,பாஜக குறித்தோ குறிப்பாக அண்ணாமலை பற்றியோ மேடை பேச்சு, செய்தியாளர் சந்திப்பு என்று பொது வெளிகளில் கருத்து தெரிவிக்க கூடாது.கட்சி தலைமை அனுமதி இன்றி பாஜக குறித்து விமர்சிப்பதோ,சர்ச்சை கருத்துக்களை கூறவோ கூடாதென்று தெரிவித்த அதிமுக தலைமை,சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறது.இதனை தொடர்ந்து அறிஞர் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்ததால் பாஜக உடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக தலைமை தெரிவித்திருக்கும் அதேவேளையில் தேர்தல் நெருங்கும் சமையத்தில் கூட்டணி குறித்து தங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என்று கூறியிருக்கிறது.