சொட்டை தலையில் முடி வளர வைக்கும் சின்ன வெங்காயம்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

0
112
#image_title

சொட்டை தலையில் முடி வளர வைக்கும் சின்ன வெங்காயம்!! இதை எவ்வாறு பயன்படுத்துவது!!

ஆண், பெண் அனைவருக்கும் தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் இன்று பெரும்பாலானோருக்கு அவர்களது இளம் வயதிலேயே முடி கொட்டுதல் பிரச்சனை ஏற்படுகிறது.

இதனால் 30 வயதிற்குள் வழுக்கை தலையுடன் சுத்தும் நிலை உருவாகி விடுகிறது. முடி உதிர்தலை கட்டுப்படுத்தி வழுக்கை தலையில் முடி வளர வைக்க மார்க்கெட்டில் பல ஷாம்புகள் வரிசை கட்டி விற்கப்படுகிறது. ;ஆனால் இந்த ஷாம்புகள் அனைத்தும் இரசாயனம் கலந்தவையாக இருபத்தினால் அவை நம் தலை முடியின் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஒன்றாக உள்ளது. எனவே நம் பாட்டி காலத்தில் பயன்படுத்தி வந்த இயற்கை வைத்தியத்தை பின்பற்றி வந்தால் இழந்த முடி அனைத்தையும் மீண்டும் வளர வைக்கலாம்.

தேவைப்படும் பொருட்கள்:-

1)சின்ன வெங்காயம்
2)வெந்தயம்

செய்முறை:-

ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தண்ணீர் ஊற்றி ஒரு இரவு ஊற விடவும்.
மறுநாள் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த வெந்தயத்தை போட்டு அரைத்து பேஸ்டாக்கி கொள்ளவும்.

இதை ஒரு கிண்ணத்திற்கு மாற்றிவிட்டு 10 முதல் 15 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்தெடுக்கவும். இந்த வெங்காய சாற்றை அரைத்து வைத்துள்ள வெந்தய பேஸ்ட்டில் பிழிந்து விடவும்.

இதை நன்கு கலந்து தலை முழுவதும் அப்ளை செய்து ஒரு மணி நேரத்திற்கு ஊற விடவும். பிறகு ஷாம்பு சீகைக்காய் அல்லது அரப்பு பயன்படுத்தி தலையை அலசிக் கொள்ளவும்.

இவ்வாறு வாரம் 2 அல்லது 3 முறை செய்து வந்தால் தலையில் முடி கொட்டிய இடத்தில் புதிதாக முடி முளைக்க தொடங்கும்.