ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் இரண்டாவது இடத்துக்கான விருது!!! தமிழகத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கினார்!!!

0
86
#image_title

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் இரண்டாவது இடத்துக்கான விருது!!! தமிழகத்திற்கு ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கினார்!!!

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் இரண்டாவது இடத்துக்கான விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் நேற்று(செப்டம்பர்27) இந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழகத்திற்கு வழங்கினார்.

இந்தியாவில் 100 நகரங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது, உள்கட்டமைப்புகளை உலகத்தரத்தில் உயர்த்துவது போன்ற பல நோக்கங்களுடன் ஸ்மார்ட் சிட்டி என்ற பொலிவுறு நகரங்கள் திட்டத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நாடு முழுவதும் செயல்படுத்தி வருகின்றது.

இதையடுத்து இந்த ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறப்பாக செயல்படுத்திய நகரங்களுக்கு விருது வழங்கும் விழா இந்தூரில் நேற்று(செப்டம்பர்27) நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான ஸ்மார்ட் சிட்டி விருது வழங்கும் விழாவில் இந்திய நாட்டின் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

அதாவது ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பல பிரிவுகளின் அடிப்படையில் 66 விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கினார். இந்த 66 விருதுகளில் நகரங்களுக்கு 31 விருதுகள் வழங்கப்பட்டது. மேலும் 4 மாநிலங்களுக்கும் 1 யூனியன் பிரதேசத்திற்கும் மற்றும் 7 நிறுவனங்களுக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.

நாட்டின் 100 நகரங்களில் சிறந்த நகரத்திற்கான தேசிய ஸ்மார்ட் சிட்டி விருது இந்தூருக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கினார். மேலும் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரத்துக்கு ஸ்மார்ட் சிட்டிக்கான இரண்டாவது இடத்துக்கான விருது வழங்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி நகரத்தின் மூன்றாவது இடத்துக்கான விருது உத்திரப் பிரதேசம் மாநிலத்தின் ஆக்ராவுக்கு வழங்கப்பட்டது.

தென் மண்டல ஸ்மார்ட் சிட்டி விருது தமிழகத்தில் உள்ள கோவை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது. மேலும் மாதிரி சாலைகள் அமைப்பது, ஏரிகள் மீட்கப்பட்டது, புதுப்பிப்புக்கான சூழல் உருவாக்க பிரிவு விருதும் தமிழகத்தின். கோவை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டது.

மேலும் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு குளங்கள் பாதுகாப்பிற்காக கலாச்சார விருது வழங்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வகுப்பறை மற்றும் மின் கண்காணிப்புக்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு சமூக அம்சங்கள் விருது வழங்கப்பட்டது.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறந்த மாநிலத்திற்கான விருது சிறப்பாக செயல்பட்டு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை நடைமுறைப்படுத்திய மத்திய பிரதேசத்திற்கு வழங்கப்பட்டது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறந்த மாநிலத்திற்கான இரண்டாவது விருது தமிழகத்திற்கு வழங்கப்பட்டது.

மேலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சிறந்த மாநிலத்திற்கான மூன்றாவது இடத்துக்கான விருது ராஜஸ்தான் மற்றும் உத்திரப் பிரதேசம் மாநிலங்களுக்கு ஒன்றாக வழங்கப்பட்டது. இந்த ஸ்மார்ட் சிட்டி விருது வழங்கும் நிகழ்ச்சியில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகார மந்திரி கருதாப் சிங் அவர்கள் கலந்து கொண்டார். மேலும் மத்தியப் பிரதேசத்தின் கவர்னர் மங்குபாய் படேல், முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோரும் பங்கேற்றனர்.

Previous articleபுரட்டாசி மாதம் தொடங்கியதால் ஹோட்டல்களில் 40 சதவீதம் விற்பனை குறைவு!!! ஹோட்டல் உரிமையாளர்கள் வேதனை!!!
Next articleபரபரப்புக்கு மத்தியில் வெளியான லியோ படத்தின் இரண்டாவது பாடல்!! தளபதி ரசிகர்களுக்கு செம்ம தீனி போங்க!!