உங்கள் வீட்டில் ஒளிந்திருக்கும் கரப்பான் பூச்சிகளை விரட்ட ஸ்மார்ட் ட்ரிக்ஸ்!!
அதிக செலவின்றி வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு கரப்பான் பூச்சிகளை விரட்ட எளிய வழிகள்.
1)வேப்ப இலை
ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை அரைத்து 1/2 லிட்டர் தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து ஆற விடவும். இந்த வேப்பிலை தண்ணீரை வடிகட்டி ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளவும். இவ்வாறு செய்வதினால் கரப்பான் பூச்சி வீட்டை விட்டு ஓடிவிடும்.
1)சமையல் சோடா
2)சர்க்கரை
ஒரு கிண்ணத்தில் ஒரு தேக்கரண்டி சமையல் சோடா மற்றும் ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து விட்டு ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளவும். இதை செய்தால் கரப்பான் பூச்சி நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.
1)வெங்காயம்
2)மிளகு
3)பூண்டு
மிக்ஸி ஜாரில் 2 சின்ன வெங்காயம், 3 மிளகு மற்றும் 2 பல் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு டம்ளர் தண்ணீரில் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் கரப்பான் பூச்சி நடமாட்டம் உள்ள இடத்தில் ஸ்ப்ரே செய்து கொள்ளவும். இதை செய்தால் கரப்பான் பூச்சி நடமாட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.