வேனில் ரேசன் அரிசி கடத்தல்… அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்!!

Photo of author

By Sakthi

 

வேனில் ரேசன் அரிசி கடத்தல்… அதிரடியாக கைது செய்த காவல் துறையினர்…

 

சென்னை எம்.ஜி.ஆர் நகரில் வேனில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார் வந்ததையடுத்து காவல் துறையினர் அதிரடியாக வேனில் அரசி கடத்திய இருவரை கைது செய்து ரேஷன் அரிசியுடன் கூடிய வேனை பறிமுதல் செய்துள்ளனர்.

 

குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.எஸ்.பி சம்பத் அவர்களுக்கு சென்னை எம்.ஜி.ஆர்.நகரில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படவுள்ளதாக இரகசியமாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சப் இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் அவர்களின் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

 

இதையடுத்து சென்னை ஜாபர்கான் பேட்டை காசி தியேட்டர் அருகே சப் இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் தலைமையிலான காவல் துறையினர் தீவிர வாகன பரிசோதனை மேற்கொண்டனர்.

 

வாகனப் பரிசோதனை செய்து கொண்டிருக்கும் பொழுது அந்த வழியே வந்த வேன் ஒன்றை நிறுத்தி காவல் துறையினர் பரிசோதனை செய்தனர். அந்த வேனில் ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் இருந்தது.

 

இதையடுத்து ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கொடுங்கையூரை சேர்ந்த கமல்கிஷோர், வியாசர்பாடியை சேர்ந்த மணிகண்டன் ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல் துறையினர் அறிவித்துள்ளனர்.

 

அண்மையில் விற்பனைக்காக வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 650 ரேஷன் அரிசிகளை காவல் துறையினர் பறிமுதல் செய்தது குறிப்பிடத்தக்கது.