மனைவியை கொலை செய்ய மசாலா பொடியில் விஷம் கலந்த கணவர்… பரிதாபமாக மாமியார் உயிரிழப்பு!!

0
37

 

மனைவியை கொலை செய்ய மசாலா பொடியில் விஷம் கலந்த கணவர்… பரிதாபமாக மாமியார் உயிரிழப்பு…

 

தெலுங்கானாவில் தனது மனைவியை கொலை செய்ய மசாலா பொடியில் விஷம் கலந்து கணவர் முயற்சி செய்துள்ளார். ஆனால் அதனால் மாமியார் அவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தெலுங்கானா மாநிலத்தில் தாராபாத் நகரத்தில் மியாபுர் பகுதியில் கோகுல் அப்பார்ட்மெண்ட் குடியிருப்பில் அனுமந்த ராவ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மனைவி உமா மகேஷ்வரி ஆவர். அனுமந்த ராவ் மற்றும் உமா மகேஷ்வரி இருவருக்கும் ஷிரிஷா என்ற மகள் உள்ளார். மகள் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

 

மருத்துவராக பணிபுரியும் ஷிரிஷா அவர்களுக்கும் சாப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் அசோக் குமார் என்பவருக்கும் கடந்த 2018ம் ஆண்டு திருமணமானது. திருமணம் ஆனவுடன் இருவரும் லண்டன் சென்று அங்கேயே பணிபுரிந்து வந்தனர். இவர்கள் இருவருக்கும் ஒரு மகள் உள்ளார்.

 

லண்டனில் வசித்து வந்த ஷிரிஷா மற்றும் அசோக் குமார் இருவருக்கும் இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் சில நாட்களில் ஷிரிஷா அவர்கள் தனியாக வசித்து வந்தார். இதையடுத்து மனைவி ஷிரிஷா பிரிந்து சென்றதால் ஆத்திரம் அடைந்த கணவன் அசோக் குமார் அவர்கள் மனைவியையும் குடும்பத்தினரையும் முழுவதுமாக கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

 

இதையடுத்து தன்னிடம் வேலை செய்த வினோத் குமார் என்பவரிடம் கொலை செய்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்று ஐடியா கேட்டுள்ளார். இந்நிலையில் மனைவி ஷிரிஷா அவர்கள் குடும்பத்துடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஹைதராபாத் வந்துள்ளார்.

 

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்த அசோக் குமார் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி விஷ ஊசி போட்டு கொலை செய்வதற்காக மூன்று நபர்களை அனுப்பி வைக்க அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி அவர்களின் மகன் மூலமாக மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் போன்ற மசாலா பொடிகளில் மெல்ல மெல்ல கொல்லும் விஷத்தை கலந்து மனைவி ஷிரிஷா அவர்களின் வீட்டுக்கு அசோக் குமார் கொடுத்து விட்டுள்ளார்.

 

விஷம் கலந்த மசாலாப் பொடிகளில் உணவு செய்து சாப்பிட்ட ஷிரிஷாவின் தாய், தந்தை மற்றும் உறவினர் 6 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு கால் மற்றும் கைகள் செயல் இழந்தது. இதற்கு ஷிரிஷாவின் தாய், தந்தை மற்றும் ஆறு உறவினர்களும் சிகிச்சை பெற்று வந்தனர்.

 

தொடர் சிகிச்சையில் இருந்த ஷிரிஷாவின் தாய் உமா மகேஷ்வரி அவர்கள் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இதில் சந்தேகம் அடைந்த மருத்துவர்கள் பாதிக்கப்பட்யவர்களின் இரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனை எடுக்க அனுப்பி வைத்தனர். பரிசோதனையின் முடிவில் அவர்கள் சாப்பிட்ட உணவில் மெல்ல மெல்ல கொல்லும் விஷம் கஷந்திருப்பது தெரியவந்தது.

 

இதையடுத்து இது குறித்து ஷிரிஷா அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் தனிப்படை அமைத்து அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். ஆய்வின் முடிவில் அடுக்குமாடி குடியிருப்பின் காவலாளி மகன் ரமேஷ் என்பவர் மசாலா பொருட்கள் கொண்டு வந்து கொடுத்தது தெரியவந்தது.

 

இதையடுத்து ரமேஷ் அவர்களை பிடித்து விசாரணை செய்த பொழுது “அசோக் குமார் கூறியபடி பூர்ணேந்திர ராவ் விஷம் கலந்த மசாலா பொருட்களை கொடுத்தேன்” என்று ரமேஷ் ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக காவல் துறையினர் 6 பேரை கைது செய்துள்ளனர். மேலும் லண்டனில் வசித்து வரும் ஷிரிஷா அவர்களின் கணவன் அசோக் குமார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.