சினேகன் மேடையில் இவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்! ரசிகர்கள் அதிர்ச்சி!

0
237

சினேகன் மேடையில் இவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்! ரசிகர்கள் அதிர்ச்சி!

தமிழ் திரைப்பட பாடல் ஆசிரியர், கவிஞர் மற்றும் நடிகர் என பல பெயர்களில் அழைக்கப்படுபவர் சினேகன். இவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் நீதி மைய கட்சியில் இணைந்தார். மேலும் அதைத் தொடர்ந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் கார்த்தி நடித்த விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் சென்ற வாரம் நடந்தது.

மேலும் அந்த விழாவில் சூர்யா, கார்த்தி, ஷங்கர், பாரதிராஜா என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.ஆனால் அந்த படத்தில் பாடல் எழுதிய கவிஞர் சினேகனுக்கு அழைப்பே வரவில்லை என தகவல் வெளியானது. அதை பற்றி சினேகன் வருத்தத்துடன் வேறொரு படத்தின் விழா மேடையில் பேசினார். அது திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இன்று சென்னையில் விருமன் படத்தின் பிரெஸ் மீட் நடைபெற்றது. அதில் சினேகனும் கலந்துகொண்டார்.அன்று பேசியதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் எனவும் கூறினார். நான் அப்படி பேசியதற்கு காரணம் பாடலாசியர்களுக்கு மரியாதை குறைந்துகொண்டி வருகிறது என கருதி தான் அப்படி பேசினேன் என்றும் கூறினார்.

மேலும் நடிகர் சூர்யா மற்றும் கார்த்திக்கு பல ஹிட் பாடல்களை நான் கொடுத்துள்ளேன் எனவும் பதிவிட்டார். மேலும் கார்த்தி நடிப்பில் ஹிட்டான பருத்திவீரன் படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களையும் நான் தான் எழுதினேன் என கூறினார்.இன்று நடைபெறும் இந்த விழாவிற்கு எனக்கு அழைப்பு வந்தது.

ஆனால் நான் இதில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் தான் இருந்தேன். ஆனால் இந்த விழாவிற்கு நான் வரவில்லை என்றால் நான் இன்னும் அதிகம் கோபத்தில் இருக்கிறேன் என மீடியாவில் பெரிதாக பேசுவார்கள் என்பதால் தான் நான் இந்த கலந்து கொண்டேன் எனவும் சினேகன் கூறினார்.

Previous articleஅவருக்கு திட்டம் என்னவென்றே தெரியாது! கூட்டணி கட்சியென்றும் பார்க்காமல் கொந்தளித்த துரைமுருகன் 
Next articleபெயர் பலகை விழுந்த விபத்தில் மரணமடைந்தவர் குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் நிவாரண உதவி