அவருக்கு திட்டம் என்னவென்றே தெரியாது! கூட்டணி கட்சியென்றும் பார்க்காமல் கொந்தளித்த துரைமுருகன் 

0
255
Durai Murugan (துரைமுருகன்)
Durai Murugan (துரைமுருகன்)

அவருக்கு திட்டம் என்னவென்றே தெரியாது! கூட்டணி கட்சியென்றும் பார்க்காமல் கொந்தளித்த துரைமுருகன்

காவிரி – குண்டாறு திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் அவரது குற்றச்சாட்டை தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இன்று வேலூரில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது காவிரி – குண்டாறு திட்டத்தை திமுக செயல்படுத்தவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டியிருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்தஅமைச்சர், அவருக்கு திட்டம் என்னவென்றே தெரியாது. காவிரி – குண்டாறு திட்டத்தில் தீபகற்ப ஆறுகளையெல்லாம் இணைப்பது ஒன்று. இன்னும் அந்தத் திட்டத்தில் காவிரியில் தண்ணீர் வரவில்லை.

இருந்தாலும் தமிழக அரசு காவிரியிலிருந்து குண்டாறை இணைக்கும் அந்தத் திட்டத்தை நான்கு பகுதிகளாக பிரித்து, முதலில் கரூர் மாயனூரில் இருந்து புதுக்கோட்டை வரை கால்வாய் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இவையெல்லாம் பாலகிருஷ்ணனுக்கு தெரியாது” என்று அவர்பதிலளித்துள்ளார்.

Previous articleவிரைவில் அமலுக்கு வரும் புதிய திட்டம் !..மா.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிவிப்பு !..
Next articleசினேகன் மேடையில் இவர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்! ரசிகர்கள் அதிர்ச்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here