டிராகன் ப்ரூட்டில் இத்தனை பயங்களா? ரத்த சோகை உள்ளவர்கள் இதனை மிஸ் பண்ணாமல் சாப்பிடுங்கள்!
டிராகன் ப்ரூட்ஸ் இதில் உள்ள சத்துக்கள் மற்றும் அதிலிருந்து கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன என்பதை இந்த பதிவு மூலமாக விரிவாக காணலாம்.
டிராகன் ப்ரூட்ஸ் என்பது கற்றாழை இனத்தைச் சார்ந்த ஓர் கொடி போன்ற ஒட்டு உயிர் தாவரம். இதன் பூர்வீகம் மெக்சிகோ அங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கு இவை பரவி உள்ளது.
நம் உடலில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் நன்மைகளை அளிக்கக் கூடியது மற்றும் அனைத்து வகையான சத்துக்களையும் இந்த பழம் கொண்டுள்ளது. இதனை உண்பதினால் ஏற்படும் நன்மைகள் மற்றும் இதன் பயன்களை பற்றி விரிவாக இந்த பதிவு மூலமாக காணலாம்.
செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனைகள், உடல் எடை குறைப்பது, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்குவது இவ்வகை பலன்கள் உள்ளது.அதற்காக இந்த பழம் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் நம் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டத்தில் தேனி பகுதியில் இவை பயிரிடப்பட்டு விற்பனைக்கு வருகிறது.
டிராகன் ப்ரூட்ஸ் கரோட்டின் லைகோபின் போன்ற ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக நிறைந்துள்ளது. இதன் காரணமாக புற்றுநோய் பாதிப்புகள் ஏற்படாதவாறு தடுக்க உதவுகிறது. உடலில் உள்ள கட்டிகளின் அளவை குறைக்க உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் டிராகன் ப்ரூட்ஸ் உண்பதன் காரணமாக நோய் எதிர்ப்பு மண்டலம் அதிகரித்து நம் உடலை எவ்வித பாதிப்புகள் ஏற்படாதவாறு பாதுகாத்து கொள்கிறது. நம் உடலில் உள்ள ஆக்சிஜனேற்றிகளின் செயல்பாடுகளை தூண்டுகிறது.
வைட்டமின் ஏ அதிகப்படியாக நிறைந்துள்ளது. டிராகன் பழத்தை உண்பதன் காரணமாக இரும்புச் சத்துக்கள் அதிகரித்து ரத்தசோகை உள்ளவர்கள் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்தசோகை பாதிப்புகள் வராதவாறு பாதுகாக்கிறது. நம் உடலில் அனைத்து இடங்களுக்கும் ஆக்ஸிஜனை கொண்டு செல்வதற்கு மிகவும் உதவுகிறது.