துபாய்க்கு புறப்பட்டு சென்ற வீரர்கள்?

0
137

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தீவீரமாக பரவி வருவதால் ஐ.பி.எல் தொடர் துபாய்க்கு மாற்றப்பட்டது. ஐபிஎல் தொடரில் விளையாட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று மதியம் துபாய்க்கு புறப்பட்டு சென்றது. சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இருந்து மதியம் டோனி உள்ளிட்ட வீரர்கள் விமான நிலையம் புறப்பட்டனர். அங்கிருந்து விமானம் மூலம் துபாய் சென்றனர்.

Previous articleமனிதர்களைப் போலவே மீன்பிடிக்கும் புத்திசாலி பறவை! பறவையின் அசத்தும் வீடியோ!
Next articleஉடனடியாக தேர்வு முடிவுகளை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உயர் நீதிமன்றம் அதிரடி உத்திரவு!