வீட்டில் எலி, கரப்பான் பூச்சி, பல்லி வராமல் தடுக்க சில எளிய வழிகள்..!!

0
156
#image_title

வீட்டில் எலி, கரப்பான் பூச்சி, பல்லி வராமல் தடுக்க சில எளிய வழிகள்..!!

வீட்டில் எலி வராமல் இருக்க சில வழிகள்:-

1)எலி தொல்லையை தவிர்க்க வீட்டில் அதன் நடமாட்டம் இருக்கும் இடங்களில் பூண்டு சாறை ஸ்ப்ரே செய்யலாம். அதேபோல் வீட்டை சுற்றி பூண்டு செடி வளர்த்தாலும் எலி தொல்லை இருக்காது.

2)வீட்டில் எலிகள் அண்டாமல் இருக்க புதினா எண்ணெயை அதன் நடமாட்டம் இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே செய்யலாம்.

3)பாரசிட்டமால் மாத்திரைகளை நுணுக்கி எலி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தூவி விடலாம்.

4)பிரியாணி இலையை பொடி செய்து எலி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தூவி விடலாம்.

5)மிளகு வாசனை எலிக்கு ஆகாது. எனவே மிளகை பொடித்து வீட்டில் எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தூவி விட்டால் அதன் தொல்லை நீங்கும்.

6)பெரிய வெங்காயச் சாறு என்றால் எலிகளுக்கு அறவே பிடிக்காது. எனவே எலி நடமாட்டம் இருக்கும் இடத்தில் பெரிய வெங்காயச் சாற்றை ஸ்ப்ரே செய்து விடலாம்.

வீட்டில் கரப்பான் பூச்சி வராமல் இருக்க சில வழிகள்:-

1)சமையல் சோடா மற்றும் சர்க்கரை சம அளவு தண்ணீரில் கலந்து கரப்பான் நடமாட்டம் இருக்கும் இடத்தில் தெளித்து விடலாம்.

2)கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் மண்ணெண்ணெயை ஸ்ப்ரே செய்து விடலாம்.

3)கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வேப்ப எண்ணையை ஸ்ப்ரே செய்து விடலாம்.

4)மிளகு, வெங்காயம், பூண்டை இடித்து தண்ணீர் கலந்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்து விடலாம்.

5)வீட்டில் கரப்பான் பூச்சி அண்டாமல் இருக்க புதினா எண்ணெயை அதன் நடமாட்டம் இருக்கும் இடங்களில் ஸ்ப்ரே செய்யலாம்.

6)பிரியாணி இலையை பொடி செய்து கரப்பான் பூச்சி நடமாட்டம் இருக்கும் இடங்களில் தூவி விடலாம்.

வீட்டில் பல்லி வராமல் இருக்க சில வழிகள்:-

1)கோழி முட்டை ஓடுகளை தூள் செய்து பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் தூவி விடலாம்.

2)வெங்காயத்தை அரைத்து அதன் சாற்றை எடுத்து பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் ஸ்ப்ரே செய்து விடலாம்.

3)பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் நாப்தலின் உருண்டைகளை வைத்தால் அதன் நடமாட்டம் குறையும்.

4)பூண்டை இடித்து பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைத்தால் அதன் தொல்லை நீங்கும்.

5)காபி தூளை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் வைக்கலாம்.

6)பல்லி நடமாட்டம் இருக்கும் இடத்தில் மயிலிறகு வைத்தால் அதன் நடமாட்டம் குறையும்.