சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு கோவிலில் சிறப்பு வழிபாடு

Photo of author

By Parthipan K

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலத்திற்கு கோவிலில் சிறப்பு வழிபாடு

Parthipan K

Updated on:

தமிழகத்தில் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சில நாட்களுக்கு முன் நடைபெற்ற திரைப்பட கலைஞர்களுக்காக இந்திய அரசின் சார்பில் வழங்கப்படும் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை பெறுவதற்கு டெல்லி சென்றிருந்தார்.

விருது பெற்ற பின் டெல்லியிலிருந்து மீண்டும் தமிழகம் வந்தார். பிறகு தம் வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த நிலையில் அவருக்கு திடீரென உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டது.

உடனே அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இதனை அரிந்த அவரது தீவிர ரசிகர்கள் இன்று மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் ரஜினிகாந்த் உடல் நலம் கூடிய சீக்கிரம் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டம் என 108 தேங்காய் உடைத்து சிறப்பு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

மேலும், இப்போது அண்ணாத்த படத்தின் பாடல்களும் கூட ஹிட்டாச்சி. இந்நிலையில் ரசிகர்கள் படத்திற்கு காத்திருக்கும் போது அவரின் உடல் சரியில்லாமையை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளமுடிய வில்லை.

எப்போதுமே தலைவரின் படத்தை முதல் நாள் முதல் ஷோ பார்ப்பது கெத்து தான். அந்நாளில் தியேட்டரில் கூட்டம் கடல் அலை போல் அலை மோதும். உடல் நிலை சரியாகி மீண்டும் தலைவரை திரையில் பார்க்க ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

அதேபோல் திருப்பரங்குன்றம் வெயில் உகந்த அம்மன் திருக்கோவிலில் சிறப்பு பிரார்த்தனை நடத்தி மண்சோறு சாப்பிட்டனர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்கள் என்பது குறிப்பிடதக்கது.