ஆப்கானிஸ்தான் அணிக்கு அபார வெற்றி

0
102
Afghanistan won against Nambia in T20 worldcup

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் 20 ஓவர் உலகக் கோப்பையின் ‘சூப்பர் 12’ லீக் போட்டிகள் நடந்து வரும் நிலையில், இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியும், நமீபியா அணியும் மோதின. ஆப்கானிஸ்தான் அணியின் முன்னால் கேப்டன் அஸ்கார் ஆப்கான் இந்த போட்டியோடு தான் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.

இந்நிலையில், அபுதாபியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணியணது 160 ரன்களை சேர்த்தது. அந்த அணியில் அதிகப் பட்சமாக முகமது ஷசாத் 45 ரன்களையும், ஹஸ்ரத்துல்லா ஷசாய் 33 ரன்களையும் எடுத்தனர். தன்னுடைய கடைசி ஆட்டத்தில் ஆடிய அஸ்கர் ஆப்கான் 23 பந்துகளில் 31 ரன்களை சேர்த்தார். மறுமுனையில் அதிரடியாஎ ஆடிய முகமது நபி 17 பந்துகளில் 32 ரன்களை சேர்த்தார்.

பின்னர், 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணியில் டேவிட் வெய்ஸை தவிர மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, அந்த அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்களை மட்டுமே சேர்த்தது. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகப் பட்சமாக டேவிட் வெய்ஸ் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்மார். ஆப்கானிஸ்தான் அணியின் நவீன் அல்-ஹக் மற்றும் ஹமீது ஹசனும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அபாரமாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய நவீன் அல்-ஹக் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்