ஹோட்டல் சுவையில் கார சட்னி! இப்படி செய்து கொடுத்தால் 10 இட்லி பத்தாது!!

Photo of author

By Divya

ஹோட்டல் சுவையில் கார சட்னி! இப்படி செய்து கொடுத்தால் 10 இட்லி பத்தாது!!

இட்லி,தோசைக்கு பொருத்தமான சைடிஷ் கார சட்னி தான்.இந்த கார சட்னியை ஹோட்டல் சுவையில் குறைவான நேரத்தில் வீட்டிலேயே சமைத்து விடலாம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை படி செய்தால் மீண்டும் வேண்டுமென்று விரும்பி கேட்டு உண்பார்கள்.

அரைப்பதற்கு தேவையான பொருட்கள்:-

சமையல் எண்ணெய் – 2 ஸ்பூன்

உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்

சிவப்பு மிளகாய் – 5

பூண்டு – 2 பற்கள்

புளி – சிறு துண்டு

கொத்தமல்லி இலை  – சிறிதளவு

பெரியவெங்காயம் – 2 நறுக்கியது

தக்காளி  – 2 நறுக்கியது

தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்:-

எண்ணெய் – 2 ஸ்பூன்

கடுகு – 1/4 ஸ்பூன்

சிவப்பு மிளகாய் – 2

கருவேப்பிலை –  சிறிதளவு

செய்முறை:-

1.முதலில் ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அவை சூடானதும் 2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறம் மாறும் வரை வறுக்க வேண்டும்.

2.பின்னர் அதில் சிவப்பு மிளகாய்,நறுக்கிய பெரியவெங்காயம் சிறிதளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

3.பிறகு அதில் பூண்டு மற்றும் புளி சேர்த்து வெங்காயம் நன்றாக வெந்த பிறகு 2 நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.

4.வதங்கிய பிறகு அதில் சிறிதளவு கொத்தமல்லி இலைகளை சேர்த்து கலந்து விடவும்.

5.சிறிது நேரம் அவற்றை ஆறவிடவும்.பிறகு மிக்சியில் சேர்த்து மைய்ய அரைக்கவும்.

தாளிப்பது:-

1.ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அவை சூடானதும் 1/4 ஸ்பூன் கடுகு, 2 சிவப்பு மிளகாய்,கருவேய்ப்பிலை சிறிதளவு சேர்த்து கலந்து விடவும்.

2.பின்பு தாளித்ததை அரைத்த சட்னியில் சேர்த்து கலந்துவிடவும்.