முதுகு தண்டை பலப்படுத்தும் இன்ஸ்டன்ட் மாவு கஞ்சி!! இதை எவ்வாறு தயார் செய்வது?

Photo of author

By Divya

முதுகு தண்டை பலப்படுத்தும் இன்ஸ்டன்ட் மாவு கஞ்சி!! இதை எவ்வாறு தயார் செய்வது?

உடல் அசைவிற்கு எலும்புகள் மிகவும் முக்கியம்.அதிலும் முதுகு தண்டு மிகவும் முக்கியமான ஒன்று. இந்த எலும்புகள் வலிமையாக இல்லை என்றால் தாங்க முடியாத அளவு முதுகு வலி ஏற்படும்.

நீண்ட நேரம் ஒரு இடத்தில் அமர்வதில் சிரமம் ஏற்படும்.அதுமட்டும் இன்றி இளம் வயதிலேயே முதுகு கூன் விழத் தொடங்கி விடும்.எனவே முதுகு தண்டை பலப்படுத்த கீழே கொடுக்கப்பட்டுள்ள இன்ஸ்டன்ட் கஞ்சியை தினமும் குடித்து வாருங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)கருப்பு உளுந்து
2)பச்சரிசி
3)வெல்லம்
4)தேங்காய்
5)ஏலக்காய் தூள்
6)சுக்கு தூள்

செய்முறை:-

அரை கப் தேங்காய் துண்டுகளை நன்கு காய வைத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்.பிறகு அடுப்பில் ஒரு வாணலி வைத்து ஒரு கப் கருப்பு உளுந்து சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு 1/4 கப் பச்சரிசி போட்டு ஒரு நிமிடம் வறுத்து அடுப்பை அணைக்கவும்.வறுத்த பொருட்களை நன்கு ஆறவிட்டு ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு மைய்ய அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

இந்த பொடியை ஒரு பாத்திரத்தில் கொட்டி ஆற விடவும்.அதன் பின்னர் 1/2 கப் வெல்லம்,ஒரு துண்டு சுக்கு மற்றும் 3 ஏலக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து கொள்ளவும்.

அரைத்த தேங்காய்,உளுந்து,பச்சரிசி மற்றும் வெல்லக் கலவையை நன்கு கலந்து ஒரு காற்று புகாத டப்பாவில் கொட்டிக் கொள்ளவும்.

அதன் பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.பிறகு அதில் அரைத்த இன்ஸ்டன்ட் உளுந்து பொடி 2 தேக்கரண்டி அளவு சேர்த்து நன்கு கலந்து விடவும்.இதை 10 நிமிடங்களுக்கு கைவிடமால் காய்ச்சினால் சுவையான சத்து கஞ்சி தயார்.