அமைச்சர்களை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்!! உளவுத்தறையின் குறுக்கு கவனிப்பால் வெளிவந்த உண்மை!!

Photo of author

By CineDesk

அமைச்சர்களை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்!! உளவுத்தறையின் குறுக்கு கவனிப்பால் வெளிவந்த உண்மை!!

CineDesk

Stalin bought the ministers white!! The truth revealed by the cross observation of the intelligence agency!!

அமைச்சர்களை வெளுத்து வாங்கிய ஸ்டாலின்!! உளவுத்தறையின் குறுக்கு கவனிப்பால் வெளிவந்த உண்மை!!

தற்போது மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் தருவாயில், பாஜக கட்சியானது எதிர் கட்சிகளை குறிவைத்து தாக்குவதாகவும், மேலும், பாஜக விற்கு எதிராக தலை தூக்கும் கட்சிகளின் தலைவர்கள், குடும்பத்தினர், கட்சி நிர்வாகிகள் என அனைவரது வீட்டிலும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ முதலியவை சோதனை செய்வதாகவும் குற்றம் எழுந்து வருகிறது.

இதனையடுத்து தமிழகத்திலும் திமுக கட்சிக்கு பாஜக தொடர்ந்து தொந்தரவை கொடுத்து வருகிறது. எனவே, இந்த சமயத்தில் முதல்வர் ஸ்டாலின் ஒரு செயலை செய்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலின் பதவி ஏற்ற நாள் முதல் அமைச்சர்களின் துறை சம்மந்தமான செயல்பாடுகள் மற்றும் கட்சி தொடர்பான செயல்பாடுகள் குறித்து உளவுத்துறையிடம் அறிக்கையை வாங்கி அதை கவனித்து வந்தார்.

அதில், எந்த எந்த துறைகளுக்கு சுணக்கம் ஏற்படுகிறதோ அவர்களுக்கு சில உத்தரவை உடனடியாக முதல்வர் ஸ்டாலின் பிறப்பித்து வந்தார்.

அந்த வகையில், தற்போது திமுக வின் அமைச்சர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகள் யாரவது ஏதேனும் அதிர்ச்சியில் இருக்கிறார்களா, இவர்கள் டெல்லியில் உள்ள மேல் அதிகாரிகளுடன் ஏதேனும் பேசி வருகிறார்களா,

மேலும் திமுக கட்சியில் இருப்பவர்கள் பாஜக கட்சியில் உள்ள நிர்வாகிகளுடன் ஏதேனும் தொடர்பு வைத்திருக்கிறார்களா என்பதையும் கவனிக்கும் படி உளவுத்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உளவுத்துறையின் மூலமாக தற்போது சில தகவல்கள் கசிந்துள்ளது. அதாவது திமுக வில் இருக்கின்ற அமைச்சர்கள் சிலர் எதிர்கட்சியினரோடு நட்பாக இருப்பதாக உளவுத்துறையின் மூலமாக முதல்வருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனால் கோபமடைந்த ஸ்டாலின் அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர்களை மறைமுகமாக திட்டி தீர்த்ததாக கூறப்படுகிறது.

மேலும், தமிழக அரசுக்கு ஆளுநரின் மூலமாக பாஜக கட்சி குடைச்சல் கொடுத்து வருகிறது. இதன் முதல் கட்டமாகத்தான் அமலாக்கத்துறை சோதனையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.