மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு! முதலமைச்சருக்கு பரிந்துரை செய்த பள்ளிக்கல்வித்துறை!

மேல்நிலை மற்றும் உயர்நிலை வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு! முதலமைச்சருக்கு பரிந்துரை செய்த பள்ளிக்கல்வித்துறை!

தமிழகத்தில் 9 முதல் 12 வகுப்பு வரையில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு கடந்த செப்டம்பர் மாதம் பள்ளிகள் திறக்கப்பட்டன . இதனை தொடர்ந்து நீண்ட நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்களின் கற்றல் திறன் பாதிக்கப்பட்டிருக்கும் என்ற காரணத்தால், அதற்கேற்றவாறு ஆசிரியர்கள் வகுப்புகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், திடீரென்று மீண்டும் நோய் தொற்று பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது அதோடு புதிய வகை நோய் தொற்றான ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் கொஞ்சம், கொஞ்சமாக, … Read more

தமிழகத்தில் இந்த பகுதியில் மட்டும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழகத்தில் இந்த பகுதியில் மட்டும் 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் தென் தமிழகத்திலிருந்து ராயலசீமா அவரையில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்த 2 நாட்களுக்கு பின் தமிழகம் மற்றும் வட கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 27ஆம் தேதி அதாவது நாளைய தினம் தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது அதோடு 28 மற்றும் 29 உள்ளிட்ட தேதிகளில் தென் தமிழகத்தில் … Read more

பலத்த பாதுகாப்புக்கு இடையில் கொண்டாடப்படும் குடியரசு தின விழா!

பலத்த பாதுகாப்புக்கு இடையில் கொண்டாடப்படும் குடியரசு தின விழா!

பலத்த பாதுகாப்புக்கு இடையில் கொண்டாடப்படும் குடியரசு தின விழா! குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்தியாவில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று பரவல் காரணமாக குடியரசு தின விழா சில கட்டுப்பாடுகளுடன் நடைபெற உள்ளது. மேலும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாமல் இருக்க நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. அதன் ஒருபகுதியாக டெல்லியில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியேற்றுகிறார். டெல்லியில் குடியரசு தின விழா காலை 10.30 மணியளவில் தொடங்கி, நண்பகல் … Read more

கவனத்துடன் இருக்க வேண்டும்; காவல்துறையினருக்கு டி.ஜி.பி அறிவுறுத்தல்!

கவனத்துடன் இருக்க வேண்டும்; காவல்துறையினருக்கு டி.ஜி.பி அறிவுறுத்தல்!

குடியரசு தின விழா அமைதியான முறையில் நடைபெறும் வகையில், காவல்துறையினர் அனைவருக்கும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு அறிவுரைகள் வழங்கினார். நாட்டின் 73 வது குடியரசு தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு காவல்துறையினர் அனைவருக்கும் தமிழக டி.ஜி.பி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதனடிப்படையில், அனைத்து காவல் அதிகாரிகளும், பாதுகாப்பு அச்சுறுத்தல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கை பற்றிய விவரங்களை தெரிந்திருக்க வேண்டும் என்றும், மாநகரங்களில் நுண்ணறிவு பிரிவு மற்றும் மாவட்டங்களில் தனிப்பிரிவு காவலர்களை அதிகபட்ச … Read more

குடியரசு தின விழா! பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த அன்பான வேண்டுகோள்!

குடியரசு தின விழா! பொதுமக்களுக்கு தமிழக அரசு விடுத்த அன்பான வேண்டுகோள்!

குடியரசு தின விழாவின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக சென்னை மெரினா கடற்கரையில் ஆளுநர் ஆர்.என். ரவி இன்றைய தினம் காலை 8 மணி அளவில் தேசிய கொடியை ஏற்றி வைப்பார். ஒவ்வொரு வருடமும் குடியரசு தின நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட தியாகிகளும், பொதுமக்களும், மாணவர்களும், பள்ளி குழந்தைகளும், பங்கேற்பது வழக்கம். நோய் தொற்று காரணமாக, நிலவி வரும் அசாதாரண சூழ்நிலையை கருத்தில் வைத்து இந்த வருடம் பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் … Read more

பிபின் ராவத் உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!

பிபின் ராவத் உட்பட தமிழ்நாட்டை சேர்ந்த 7 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிப்பு!

மத்திய அரசு சார்பாக பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு வருடம் தோறும் பத்ம விருதுகளை வழங்கி கவுரவித்து வருகின்றது கலை, இலக்கியம் மற்றும் கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை அறிவியல் மற்றும் பொறியியல் பொது விவகாரங்கள் குடிமை சேவை வர்த்தகம் மற்றும் தொழில் போன்ற அனைத்து துறைகளிலும் மிகச் சிறந்த சேவைகளை செய்தவர்களுக்கு பத்ம விபூஷண், பத்மபூஷண், பத்மஸ்ரீ, உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுகின்றன. அதனடிப்படையில், இந்த வருடத்திற்கான விருதுகள் சுமார் 128 பேருக்கு வழங்கப்படும் என்று … Read more

இந்திய குடியரசு தினத்தின் வரலாறு என்னவென்று தெரியுமா?

இந்திய குடியரசு தினத்தின் வரலாறு என்னவென்று தெரியுமா?

ஆங்கிலேயர்களின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்தில் தேசிய அளவிலும், மாநில அளவிலும் பல புரட்சிகளையும், அகிம்சை வழியில் பல போராட்டங்களையும், நடத்தி தன்னுடைய ரத்தத்தையும், தன்னுடைய உடலையும் நம்முடைய நாட்டிற்காக அர்பணித்த தேசத் தலைவர்களையும், வீரர்களையும், புரட்சியாளர்களையும், நினைவுபடுத்தும் நாள்தான் இந்த குடியரசு நாள் . இந்திய விடுதலைக்குப் பின்னர் மக்களாட்சி மட்டுமே நாட்டின் சிறப்பான வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க முடியும் என்று கருதி இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர் டாக்டர் அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் … Read more

நோய்த்தொற்று பரவல்! கிராம சபை கூட்டத்தை அதிரடியாக ரத்து செய்த தமிழக அரசு!

நோய்த்தொற்று பரவல்! கிராம சபை கூட்டத்தை அதிரடியாக ரத்து செய்த தமிழக அரசு!

தமிழகத்தில் காந்தி ஜெயந்தியான அக்டோபர் மாதம் 2ம் தேதி குடியரசு தினமான ஜனவரி மாதம் 26ஆம் தேதி சுதந்திர தினமான ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி, உள்ளிட்ட தினங்களில் தமிழகம் முழுவதும் இருக்கின்ற கிராம சபைகளில் கூட்டங்கள் நடத்தப்பட்டு அந்த பகுதியில் இருக்கின்ற குறை, நிறைகளை தெரிவிக்கும் நடைமுறை காலம் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த வகையில், குடியரசு தினமான இன்றைய தினம் தமிழகத்தில் கிராமசபை கூட்டங்கள் நடைபெற வேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவல் மறுபடியும் … Read more

அது மட்டும் முடியவே முடியாது! மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

அது மட்டும் முடியவே முடியாது! மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி!

நகரப்புற உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்று தெரிவித்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது. இதுதொடர்பாக உரையாற்றிய நீதிபதிகள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருக்கிறது என தெரிவித்திருக்கிறார்கள். தேர்தலை நடத்துமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தேர்தலை ஒத்திவைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட முடியாது, மாநில தேர்தல் ஆணையம் நோய்த்தொற்று தடுப்பு விதிகளை அனைத்து கட்சிகளும் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். விதிமீறல் இருக்குமானால் நீதிமன்ற கவனத்திற்கு … Read more

நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு! வெடித்தது சர்ச்சை அதிமுகவில் பரபரப்பு!

நயினார் நாகேந்திரன் சர்ச்சை பேச்சு! வெடித்தது சர்ச்சை அதிமுகவில் பரபரப்பு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் படித்துவந்த அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி விடுதியில் தங்கியிருந்தபோது தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மாணவியை மதம் மாற வற்புறுத்தியதன் காரணமாக, மன உளைச்சல் ஏற்பட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் மற்றும் பாஜகவின் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் அதற்கு பள்ளி நிர்வாகம் தன்னுடைய மறுப்பை தெரிவித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், மாணவியின் தற்கொலைக்கு நீதி கேட்கும் விதத்தில் தமிழக பாஜக சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது இதில் … Read more