அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் தி மு க – ஸ்டாலின் பரபரப்பு தகவல்!

அதிமுகவுக்கு ஆதரவு அளிக்கும் தி மு க - ஸ்டாலின் பரபரப்பு தகவல்!

மருத்துவ படிப்பு படிக்க விரும்பும் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு கட்டாயம். தற்போது அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்குவதற்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவத்தில் உள் ஒதுக்கீடு கோரிய அதிமுகவுக்கு ஆதரவாக திமுக இணைய உள்ளதாக ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார் அதுமட்டுமன்றி உள்ஒதுக்கீடு வழங்கும் படி ஆளுநருக்கு கடிதம் எழுதி இருப்பதை  குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி மாநில உரிமைகளை மீட்டெடுப்பதற்காக என்ன வகையான போராட்டம் நடத்த வேண்டும் … Read more

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது!

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு, மக்களின் நலனுக்காக அந்த ஆலையை மூடுவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.  தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தற்போது வரை திறக்கப் படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. தமிழக அரசு மேற்கொண்ட  நடவடிக்கைக்கு எதிராக வேதாந்தா என்ற நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இந்த வேதாந்தா நிறுவனம் தொடுத்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் வேதாந்தா நிறுவனம் இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்ததால், … Read more

உண்மையென நிரூபித்தால் விவாதத்திற்கு நான் ரெடி…! வி.பி.துரைசாமி விளாசல்…!

உண்மையென நிரூபித்தால் விவாதத்திற்கு நான் ரெடி...! வி.பி.துரைசாமி விளாசல்...!

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக வேளாண் சட்ட திருத்த மசோதா சம்பந்தமாக கலந்தாய்வு மற்றும் கருத்துப் பரிமாற்ற கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. அதில் மாநில துணை தலைவர்கள் விபி துரைசாமி மற்றும் அண்ணாமலை ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வி.பி துரைசாமி அவர்கள், திமுகவும் காங்கிரசும் விவசாய சட்டத் திருத்த மசோதாவின் பெயரில் பொய்யான குற்றச்சாட்டுகளை மக்களிடம் கூறி வருகிறார்கள். என்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாயிகளின் வயலில் … Read more

பாமகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி! அன்புமணி ராமதாஸ் பெருமிதம்

Anbumani Ramadoss

பாமகவின் கோரிக்கைக்கு கிடைத்த வெற்றி! அன்புமணி ராமதாஸ் பெருமிதம்   ஆசிரியர் தகுதிச் சான்று ஆயுள் முழுவதும் செல்லும் என்ற அறிவிப்பை வரவேற்ற பாமகவின் இளைஞர் அணி தலைவரும்,மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இது குறித்து பாமக தான் முதலில் கோரிக்கை வைத்தது என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது.   இந்தியா முழுவதும் இனி நடத்தப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வுகளில் வெற்றி பெறுவோருக்கு வழங்கப் படும் தகுதிச் சான்றிதழ்கள் வாழ்நாள் முழுவதும் செல்லும் … Read more

முதல்வரை சந்தித்த சிங்கப்பூர் தூதர்

முதல்வரை சந்தித்த சிங்கப்பூர் தூதர்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தலைமைச் செயலகத்தில் இந்தியாவிற்கான சிங்கப்பூரின் தூதர் சைமன் வாங் சந்தித்திருக்கிறார். இந்த சந்திப்பின் போது, சென்னையில் அமையவிருக்கும் சிங்கப்பூர் நாட்டின் கேப்பிட்டல் லேண்ட் நிறுவன வளாகத்தில் நடுவதற்கான மரக்கன்றுகளை கேபிடல்லேண்ட் நிறுவனத்தின் ஹெட் சி.வேலனிடம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வழங்கினார்.

பட்டப்பகலில் பேராசிரியியிடம் நகையைப்பறிக்க முயன்ற ஆசாமிகள்…! போலீசாரிடம் சிக்கியது எப்படி …!

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே கல்லூரி பேராசிரியையிடம் அவர் கழுத்தில் அணிந்திருந்த நகையை படிப்பதற்கு முயற்சி செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சாத்தான்குளம் அருகே இருக்கும் மணிநகர் ராமநாதபுரத்தை சேர்ந்த கோபால் என்பவரின் மகள் வசந்தி. இவர் கொம்மடிக்கோட்டை யில் இருக்கும் ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில், நேற்றைய தினம் கல்லூரி முடிந்து இரண்டு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்த அவரை அடைக்கலாபுரம் அருகே மற்றொரு இருசக்கர வாகனத்தில் … Read more

அரசு ஊழியர்களுக்கு நடப்பாண்டிற்கான போனஸ் அறிவிப்பு – மத்திய அரசு தகவல்!

அரசு ஊழியர்களுக்கு நடப்பாண்டிற்கான போனஸ் அறிவிப்பு - மத்திய அரசு தகவல்!

நடப்பாண்டிற்கான போனஸ் வழங்குவது குறித்து மத்திய அரசு ஆலோசித்து அது தொடர்பான தகவலை தற்போது வெளியிட்டுள்ளது. அதாவது கெசட்டட் பதவி இல்லாத மத்திய அரசு ஊழியர்களுக்கு (2019-2020) நடப்பாண்டிற்கான போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போனஸ் குறைந்த பட்சம் 30 லட்ச ஊழியர்களுக்கு கிடைக்கும் என்ற தகவலையும் அறிவித்துள்ளது.  அதுமட்டுமன்றி உற்பத்தி சார்ந்த மற்றும் உற்பத்தி சாராத போனஸையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.  மக்கள் தற்போது இருக்கும் சூழ்நிலையில் தங்களின் குடும்பத்தினருடன் இணைந்து பண்டிகை காலத்தை கொண்டாடுவதற்காக போனஸ் … Read more

தமிழகத்தில் குறைந்தது வரும் கொரோனா உயிரிழப்பு! அக். 21 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் குறைந்தது வரும் கொரோனா உயிரிழப்பு! அக். 21 கொரோனா பாதிப்பு நிலவரம்!!

தமிழகத்தில் தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் இன்று மட்டும் புதிதாக 3,086 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை தொற்று பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 6,97,116 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று மட்டும் தொற்று காரணமாக 39 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 10,780 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் மட்டும் 4,301 பேர் கொரோனா தொற்றில் இருந்து … Read more

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 135 டன் பெரிய வெங்காயம் இறக்குமதி!

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 135 டன் பெரிய வெங்காயம் இறக்குமதி!

தற்போது வடமாநிலங்களில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பெரிய வெங்காயத்தை ஏற்றுமதி செய்து வரும் லாரிகள் தமிழகத்திற்கு வர தடை உருவாகியுள்ளது. இதனால் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு ஏற்கனவே விற்கப்பட்டு இருந்தது.  ஆனால் புதிய லோடுகள் வராததால் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 80 ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர் சூழ்நிலையை தவிர்ப்பதற்கு எகிப்திலிருந்து பெரியவெங்காயம் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளது. அதாவது … Read more

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி மறுப்பு :! மத்திய அரசுக்கு நோட்டீஸ்

சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்ற பெண்ணுக்கு ஐஏஎஸ் பணி மறுப்பு :! மத்திய அரசுக்கு நோட்டீஸ்

சிவில் சர்வீஸ் தேர்வில் 286- ஆம் இடம்பிடித்த மதுரையை சேர்ந்த பெண்ணொருவருக்கு ஐஏஎஸ் பதவி மறுக்கப்பட்டதனை தொடர்ந்து மத்திய அரசு பதிலளிக்க மத்திய நிர்வாக தீர்ப்பாயத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டம் மணிநகரை சேர்ந்த எம் பூர்ண சுந்தரி என்பவர், கடந்த 2019-ஆம் ஆண்டு நான்காவது முறையாக சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அகில இந்திய அளவில் 286 இடத்தை பிடித்தார். ஆனால் அவருக்கு ஐஏஎஸ் பதவி வழங்காமல் ஐஆர்எஸ் (இந்திய வருவாய் பணி வருமான வரி … Read more